11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியா விடுதலை அடைந்த போது, ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் ஹரி சிங், ஜம்மு காஷ்மீர் சமஸ்தானம் மற்றும் அங்கு வாழும் மக்களின் நலன் கருதி சில நிபந்தனைகளுடன், ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க சம்மதித்தார். மன்னர் ஹரிசிங்சின் நிபந்தனைகளை நிறைவேற்ற, இந்திய அரசு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தக்க திருத்தங்கள் மேற்கொண்டு, சட்டப் பிரிவு 370-இல் ஜம்மு காஷ்மீர் பகுதிக்கும் மக்களுக்கும் சில சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன. இந்தியாவிலேயே இந்த வகையான சிறப்புத் தகுதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனுபவித்து வந்தாலும் கூட, இந்தியாவின் இராணுவ முற்றுகையும் அந்த மாநிலத்திற்கு மிக அதிகம். ஆனாலும் இந்த மாநிலத்தின் மீதான பொறாமைக் கண்கள் எப்போதும் கண்காணித்தவாறே உள்ளன. அதன் பொருட்டே இந்த ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு தகுதி அளிக்கும் சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு வரும் என தகவல்கள் கூறுகின்றன. இதன்காரணமாக காஷ்மீரில் பதட்டம் ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த சிறப்பு தகுதியின் ஆதரவாளர்களில் ஒருவரான யாசின் மாலிக்கை காவல்துறையினர் தடுப்புக்காவலில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,072.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



