11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாம்சங் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மிடுக்குப்பேசிகளை வாங்க ஏர்டெல் எளிய மாத தவணை முறை வசதியை அறிவித்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் மிடுக்குப்பேசிகள் கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் இந்திய விலை அறிவிக்கப்பட்டு முன்பதிவும் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் இந்த வகை செல்பேசிகளை வாங்க வாடிக்கையாளர்களுக்கு எளிய மாத தவணை சலுகையை அறிவித்துள்ளது. கேலக்ஸி எஸ்10 மிடுக்குப்பேசியின் சேமிப்பக அடிப்படையிலான இரண்டு வகைகள், கேலக்ஸி எஸ்10 பிளஸ் மிடுக்குப்பேசியின் சேமிப்பக அடிப்படையிலான இரண்டு வகைகள், ஏர்டெல் தளத்தில் மாத தவணையில் வாங்கிட முடியும். ஏர்டெல் சலுகையில் கேலக்ஸி எஸ்10 (128 ஜி.பி. உள்ளடக்க சேமிப்பு) மிடுக்குப்பேசி வாங்க ரூ.9,099 உம் (512 ஜி.பி. உள்ளடக்க சேமிப்பு) வாங்க ரூ.13,809 உம் மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மிடுக்குப்பேசிக்கு ரூ.15,799 உம் முன்பணமாக செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பணம் செலுத்தி இந்த மிடுக்குப் பேசிகளை வாங்குவோர் (128 ஜி.பி. உள்ளடக்க சேமிப்பு) மிடுக்குப்பேசிக்கு மாதம் ரூ.2,999 தொகையை 24 மாதங்களுக்கும், (512 ஜி.பி. உள்ளடக்க சேமிப்பு) மிடுக்குப்பேசிக்கு ரூ.3,499 தொகையை 24 மாதங்களுக்கும் தவணையாக செலுத்த வேண்டும். அந்த வகையில் முன்பணம் மற்றும் தவணை தொகையை சேர்க்கும் போது கேலக்ஸி எஸ்10 (128 ஜி.பி. உள்ளடக்க சேமிப்பு) மிடுக்குப்பேசி விலை ரூ.81,075 ஆகிறது. கேலக்ஸி எஸ்10 (512 ஜி.பி. உள்ளடக்க சேமிப்பு) மிடுக்குப்பேசி விலை ரூ.97,785 ஆகிறது. மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் (128 ஜி.பி. உள்ளடக்க சேமிப்பு) மிடுக்குப்பேசிக்கு விலை ரூ.87,775 விலையாகச் செலுத்துவர். கேலக்ஸி எஸ்10 அல்லது கேலக்ஸி எஸ்10 பிளஸ் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி அட்டைகளைக் கொண்டு பணம் செலுத்தும் போது ரூ4000-ரூ.6000 பணம் திரும்பக் கிடைக்கும் வசதி உண்டு. மேலும் பழைய மிடுக்குப்பேசிகளை மாற்றிக் கொள்ளும் போது ரூ.15,000 வரை தள்ளுபடி பெறலாம். முன்பதிவு இன்றிலிருந்து இரண்டு கிழமைகளுக்கு உண்டு. இவற்றின் விநியோகம் முன்பதிவு முடிந்ததிலிருந்து தொடங்குகிறது. நிபந்தனைகளக்கு உட்பட்டு எளிய மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,072.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



