Show all

கதைத்தலைவியைக் கரம் பிடித்தார். அறிமுக இயக்குனர்! காதலிக்க நேரம் இல்லை நாகேஷ் மாதிரி

02,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காதலிக்க நேரம் இல்லை படத்தில்  நாகேஷ்- படம் எடுக்கப் போகிறேன், படம் எடுக்கப் போகிறேன் என்று சச்சுவுக்கு வசனம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார் படம் முழுக்க நாகேஷ். கடைசியில் படம் எடுக்காமல் சச்சுவையே திருமணம் செய்து கொண்டு விடுவார் நாகேஷ்.

அது மாதிரி ஒரு சின்ன வித்தியாசத்தோடு, அதாவது இந்த இயக்குநர் படம் எடுத்து விட்டார் ஆனால் இன்னும் படம் வெளிவரவில்லை. 

தான் இயக்கி வரும் முதல் படம் வெளியாகும் முன்பே அந்த படத்தின் கதைத்தலைவியைத் திருமணம் செய்திருக்கிறார் இயக்குனர் தீபக் நாராயணன்.

ஒரு படத்தில் நடிக்கும் கதைத்தலைவியை அந்தப் படத்தின் இயக்குனர் காதலித்து திருமணம் செய்துகொள்வது புதிது அல்ல. ஆனால் முதல் படம் வெளியாகும் முன்பே தனது கதைத்தலைவியை மணந்து இருக்கிறார் 'பேய் எல்லாம் பாவம்' படத்தின் இயக்குனர் தீபக் நாராயணன்.

இவர் மலையாளத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்துவிட்டு தமிழில் மாறுபட்ட வித்தியாசமான ஒரு பேய் படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பவர் டோனா சங்கர். 

இதுகுறித்து தீபக் சொல்லும் போது, 'காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடந்த திருமணம் இது. டோனா என்னுடைய படம் மட்டும் அல்லாமல் தொலைக்காட்சி தொடரிலும் நடித்துவருகிறார். அவருக்கு முதன்மைத்துவம் தரும் நல்ல கதைகளில் தொடர்ந்தும் நடிப்பார்' என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,820.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.