Show all

அமர்நாத்தில் 133000 பேர் பனிநடுகல் உருவத்தை பார்வையிட்டுள்ளனர்.

29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நம் பழந்தமிழரிடையே தோன்றிய நடுகல் வழிபாடு: நம்மோடு தெய்வமாக வாழ்ந்து இறந்த சமூக காவலர்களுக்கு குலதெய்வ வழிபாடாக நடத்தப் பட்டது.  தொடக்கத்தில் ஆரியர்கள் நடுகல்லை  லிங்கம் போல் இருக்கிறது என்று கிண்டல் அடித்தவர்கள் லிங்கம் என்பதையே பொருளுடைய செய்தியாக்கி லிங்கத்தையே அவர்கள் பெருந்தெய்வ வழிபாடாக வழிபடத் தொடங்கி இன்றும் பின்பற்றி வருகிறார்கள்.

அதனாலேயே தமிழர் நடுகல் வழிபாடும் லிங்கமாக கற்பிக்கப் படுகிறது. தமிழர் அக இலக்கியங்களில் தலைவன் தலைவி பெயரைக் கூட சொல்லக் கூடாது என்கிற மரபு உடையவர்கள். தமிழரைப் பொறுத்தவரை அது நடுகல் வழிபாடுதான். 

ஆண்டுக்கு ஒருமுறை குளிர் காலத்தில் ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் குகையில் உருவாகும் பனிநடுகல் வடிவத்தை வணங்குவதும், வழிபாட்டுப் பயணம் மேற்கொள்வதும் இந்தியா முழுவதும் மரபாக பின்பற்றப் பட்டு வருகிறது. 

சில ஆண்டுகளில் அந்தப் பனிநடுகல் உருவம் பல நாட்கள் நீடித்திருக்கும்.  சில ஆண்டுகளில் சில நாட்களில் விரைவாக கரைந்து விடும். 

அமர்நாத் பனிநடுகல் உருவ காட்சிக்காக ஆண்டுதோறும் பல லட்சம் பேர் ஜம்மு காஷ்மீரில் குவிகின்றனர். மழையையும் குளிரையும் பொருட்படுத்தாமல் பனிநடுகல் உருவத்தை பார்த்து விடுவதற்காகவே காத்திருந்து பயணம் செல்கின்றனர். 

அமர்நாத் குகை: ஜம்மு காஷ்மீரின் தென்பகுதியில் பத்தல் என்ற பகுதியில் இருந்து 3 ஆயிரத்து 880 மீட்டர் உயரத்தில் இமயமலையில் இருக்கிறது. பனிநடுகல் உருவம் உருவாகி கரையும் காலம் பொதுவாக ஆனி மாதம் ஆகும். ஆடி மாத இறுதியில் இது கரைந்து விடும். இந்த ஆண்டு காஷ்மீர் மாநிலம் அமர்நாத்தில் உள்ள குகைக்கோயிலில் உள்ள பனிநடுகல் உருவத்தை காண்பதற்கான வழிபாட்டுப் பயணம் தொடங்கி 14 நாட்களில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 481 பக்தர்கள் பனிநடுகல் உருவத்தை கண்டு வழிபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

கடந்த புதன்கிழமை மட்டும் 15,696 பக்தர்கள் வழிபட்டு பூசைகள் செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, 3,419 பேர் கொண்ட அடுத்த குழுவினர் ஜம்முவில் பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து நேற்று அமர்நாத் புறப்பட்டனர். இவர்களில் 1,202 பேர் பல்டால் பாதை வழியாகவும் 2,217 பேர் பஹல்காம் வழியாகவும் செல்கின்றனர். இன்னும் ஐம்பது நாட்களில்  அமர்நாத் வழிபாட்டுப் பயணம் நிறைவடையும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,847.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.