Show all

மாணவி உயிரிழப்பு! போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கையில்லா பயிற்சி; காவல்துறை நடவடிக்கை

29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோவை நரசீபுரம் பகுதியில், தனியார் கலை அறிவியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. நேற்று அந்த கல்லூரியில், பேரிடர் மேலாண்மைப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதற்காக எந்த முன்னேற்பாடுகளும் செய்யாமல், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டாவது மாடியிலிருந்து, கீழே வலைகட்டி குதிக்கும் பயிற்சியின்போது, வணிகவியல் ஆளுமை இளவல் இரண்டாம் ஆண்டு படித்துவந்த, லோகேஷ்வரி என்ற மாணவி எதிர்பாராத விதமாக, உயிரிழந்தார். 

அந்த மாணவி குதிக்க அஞ்சியதாகவும், பயிற்சியாளர் ஆறுமுகம் வலுக்கட்டாயமாக குதிக்க வைத்ததாலும்தான், மாணவி உயிர் பறிபோனது என்று மாணவர்கள் குற்றம்சாட்டினர். 

சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த காணொளி பரவி வருகிறது. இதையடுத்து, ஆறுமுகம் மீது, 304(2) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், கல்லூரிக்கு அழைத்துச் சென்றும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,847.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.