Show all

உயர் அறங்கூற்றுமன்றம் கேள்வி! தினகரன் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுப்பது ஏன்

29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120:சென்னை-சேலம் 8 வழிச்சாலை அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தர்மபுரி மாவட்டத்தில், இந்தச்சாலை திட்டம் குறித்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் காவல்துறையிடம் மனு கொடுக்கப்பட்டது.

ஆனால், காவல்துறையினர் அனுமதி வழங்க மறுத்து விட்டனர். இதையடுத்து அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.கே.ராஜேந்திரன், சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், 'எங்கள் கட்சியின் நிறுவனர் தினகரன் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் என்பதால், காவல்துறையினர் உள்நோக்கத்துடன் அனுமதி வழங்க மறுக்கின்றனர்' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு அறங்கூற்றுவர் பி.என்.பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த அறங்கூற்றுவர், இந்தப் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கினால் என்ன? காவல்துறையினர் ஏன் மறுக்கின்றனர்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். பின்னர் விசாரணையை வருகிற செவ்வாய் கிழமைக்கு தள்ளிவைத்தார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,847.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.