24,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5127: தமிழினமும் கொண்டாட வேண்டிய, World Science Day for Peace and Development என்கிற தலைப்பிற்கு உரிய இன்றைய நாளில் அதுகுறித்த புரிதலை நாம் முதலில் விளங்கிக் கொள்ளத் தேவையிருக்கிறது. உலகு என்கிற தமிழ்ச்சொல்தான் உல்டு ஆகியிருக்கிறது. இயற்றமிழ் என்கிற பொதுத்தலைப்பில் இயல்கணக்கு, இயல்அறிவு என்கிற இரண்டு கிளைத் தலைப்புகளைத் தமிழ் கொண்டுள்ளது. இயல்கணக்கு என்கிற கிளையை, இன்றுவரை, உலகின் எந்த மொழியினமும் முன்னெடுத்திருக்கவில்லை. இயல்அறிவு என்கிற கிளையை சயின்ஸ் என்கிற தலைப்பில் உலகினர் பேரளவாக முன்னெடுத்து வளர்ந்து வருகின்றனர். இயல்அறிவு என்னும் தலைப்பின் பழமைக்கு பிராமணிய வருகைக்குப் பின்பு நமது இயல்அறிவு என்கிற தலைப்பையும் இயல்அறிவு என்கிற துறையையும் பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள், மார்க்சியம் என்கிற அயல்இயல்களுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டு, இயல்அறிவை உலகினரின் அறிவுத்துறையாக மலைத்து, அதற்கு, அறிவியல் என்றே பிழையாகப் பெயர் சூட்டிக் கொண்டாடி வருகிறோம். அடுத்து வரும் சொற்களுக்கான தமிழ்ப்படுத்தலில் எந்தச் சிக்கலும் இல்லை. இன்றைய நாளில் நம்முடையதான உலகு என்கிற சொல்லையும், இயல்அறிவு என்கிற சொல்லையும் நிறுவுவது உலகத்தமிழினத்தின் கடமை ஆகும். அனைவருக்கும், 'அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக இயல்அறிவு நாள்' வாழ்த்துக்கள்.
கல்தோன்றி மண்தோன்றா காலத்து வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி என்கிற முழக்கம் பறைசாற்றுகிற பாங்கிற்கு உரியது ஆகும்.



