08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் வன ஆய்வு நிறுவனத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் மோடி பங்கேற்று யோகா செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஏறக்குறைய 55 ஆயிரம் பேர் பங்கேற்று ஒரே நேரத்தில் யோகா செய்தனர். அப்போது, யோகா செய்து கொண்டிருந்தபோது, 73 அகவை மூதாட்டி திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆம்புலென்ஸ் வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் பலன்அளிக்காமல் அந்த பெண் உயிரிழந்தார். மருத்துவர்களின் அறிக்கைக்கு பின்புதான் அந்தப் பெண் எப்படி இறந்தார் என்பது தெரியவரும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,826.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



