Show all

ஆகா தூய்மை இந்தியா!

08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தூய்மை இந்தியா திட்டத்தை தொடக்கி வைக்கும் முன்னர், தூய்மையாக இருந்த நாமக்கல் பேருந்து நிலையத்தில், குப்பைகளை நகராட்சி ஊழியர்களைக் கொண்டு கொட்ட வைத்த நிகழ்வு, பலதரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 

நகராட்சி ஊழியர்கள் ஏற்கனவே பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்தி வைத்திருந்தனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாமக்கல் பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டப் பணிகளில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆளுநர் வருவதையொட்டி ஆளுநர் துப்புரவுப் பணி செய்வதற்காகத் தூய்மையாக இருந்த பேருந்து நிலையத்தில் துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகளைப் போட்டு அசுத்தப்படுத்தினர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,826.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.