இந்தியாவின் முதல் ஹிந்து தீவிரவாதி நாதுராம் கோட்சே என்று கமல் கூறியதில் எந்த தவறும் இல்லை என தி.க தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். 31,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவின் முதல் ஹிந்து தீவிரவாதி நாதுராம் கோட்சே என்று கமல் கூறியதில் எந்த தவறும் இல்லை என தெரிவித்த தி.க தலைவர் கி.வீரமணி, இந்தியாவின் கடைசி ஹிந்து தீவிரவாதியும் அவர்தான் என்று தெரிவிக்கிறார். இந்தியாவில் ஆட்சி புரிகிற பாஜகவினரே ஹிந்து ஆதிக்கவாதிகள் என்பதால்தானே, இமயத்தில் இருந்து குமரி வரை பாஜக மதவாதக்கட்சி, பாஜக மதவாதக்கட்சி, என்ற முழக்கம் முன்னெடுக்கப் பட்டு வருகிறது. ஹிந்துத்துவா ஆதிக்கவாதத்தில் இருக்கும் போது, ஹிந்துத்துவாவிற்கு தீவிரவாதத் தேவை என்ன இருக்க முடியும். ஹிந்துத் தீவிரவாதம், முதலும் முடிவுமாக முற்று பெற்றது ஹிந்து தீவிரவாதி நாதுராம் கோட்சேவோடு என்கிறார் தி.க தலைவர் கி.வீரமணி. அரவக்குறிச்சி தொகுதியில் கருத்துப் பரப்புதல் செய்த நடிகர் கமல் விடுதலை இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே என்றார். கமலின் இந்த பேச்சுக்கு ஆங்காங்கே திறனாய்வுகள் முன்னெடுக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் கமலின் பேச்சுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி ஆதரவு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசியபோது, அவரிடம் கமல் பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கி வீரமணி, இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே என கமல் கூறியது சரிதான் என்றார். நாதுராம் கோட்சே ஆர்எஸ்எஸ் அமைப்பில் பயிற்சி எடுத்தவர். முதலும் அவர்கள் தான் கடைசியும் அவர்கள் தான் என்றும் கி.வீரமணி கூறினார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,152.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



