Show all

பெற்றோர் பதறாத வகையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை முன்னெடுங்கள்! திமுக தலைவர் ஸ்டாலின்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளது 01,ஆனிக்கு (சூன் 15) ஒத்திவைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததை அடுத்து, உண்மையிலேயே அதற்குள் நிலைமை சீராகி விடுமா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளது 01,ஆனிக்கு (சூன் 15) ஒத்திவைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததை அடுத்து, உண்மையிலேயே அதற்குள் நிலைமை சீராகி விடுமா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு 19,வைகாசி அன்று (சூன் 1) நடக்கும் என தமிழக அரசு அறிவித்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதனை தொடர்ந்து தேர்வு தொடர்பாக முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர், 19,வைகாசி அன்று (சூன் 1) தொடங்க இருந்த 10ம் வகுப்பு தேர்வு நாளது 01,ஆனிக்கு (சூன் 15) ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கீச்சுவில் பதிவிட்டுள்ளதாவது: கொரோனா தொற்று பரவல் குறையாத காலத்தில் முறையான ஆலோசனையின்றி தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு தேர்வை, எதிர்ப்பு பலமானதும் நாளது 01,ஆனிக்கு (சூன் 15) தள்ளி வைத்துள்ளார்கள். இப்பொழுதும் குழப்பம்தான். அதற்குள் நிலைமை சீராகிவிடுமா மாணவரும், பெற்றோரும் பதறாத வகையில் தம் திட்டத்தை அறிவிக்க வேண்டியது அரசின் கடமை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.