17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மக்களிடமும், இதழியலாளர்களிடமும் ரஜினிகாந்த் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது என நமது அம்மா நாளிதழ் ஒத்தூதியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அமைதிப் பேரணியில் எழுந்த கலவரத்தில், 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஒரு நடிகன் என்ற முறையில் என்னைப் பார்த்தால் போராடி பாதிக்கப் பட்ட மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றெல்லாம் பீடிகை போட்டு விட்டு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லப் போவதாக கிளம்பி நேற்று தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த், போராடிய மக்களைப் புழுதி வாரித் தூற்றி விட்டு வந்திருக்கிறார். போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம் என்பதே ரஜினிகாந்த்தின் தூற்றல் கருத்து. இந்தக் கருத்துக்கு அரசியல் கட்சிகள் பலவும் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தன. இந்த நிலையில், ரஜினியின் கருத்தை வரவேற்று கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது, அதிமுகவின் அதிகாரபூர்வ இதழான நமது அம்மா நாளிதழ். குறிப்பாக, 99 நாள்களாக நடைபெற்றுவந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், அமைதி வழியில் நிகழ்ந்துவந்த நிலையில், நூறாவது நாள் போராட்டத்தில் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் உட்புகுந்ததற்குப் பிறகுதான் அமைதி வழிப் போராட்டம், கண்ணீர் புகைக்குண்டு, துப்பாக்கிச்சூடு என களேபரமானது என்பதை கருக்கொண்டு பார்க்கிறபோது, ரஜினிகாந்த் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கும் விஷக் கிருமிகளும் சமூக விரோதிகளும் திமுகவினர்தான் என்பதில் எள்ளவும் ஐயமில்லை. என்று எழுதியிருக்கிறது. அப்படியானால் எடப்பாடி அரசு, துப்பாக்கிச்சுட்டிற்கு பலியாக்கி இருக்க வேண்டியது கீதா ஜீவனையோ அல்லது அவர்களுடன் மக்கள் போராட்டத்தில் கலக்க வந்த ஐநூறுக்கு மேற்பட்ட திமுகவினரையல்லவா? எங்கே அப்பாவி மக்களை சுட்டு போராடுகிறவர்களுக்கு கிலி ஏற்படுத்துவதற்கான முயற்சி, விணாக திமுகவினரைச் சுட்டு அதிமுக ஆட்சி கலைப்பில் முடிந்து விடுமோ! என்று பயந்து அவர்களைத் தனியாக பாதுகாப்பாக திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து விட்டு, இல்லாத சமூக விரோதிகள் இவர்கள் தான் அடையாளம் காட்டுவது, தங்கள் புளுகு மூட்டைக்கு, அப்பாவித் தனமாக பாஜகவின் காய் நகர்ததலுக்கு ரஜினி மூட்டிய தீயை குளிர்காய பயன் படுத்துகிறது அதிமுக. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,804.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



