Show all

63 விழுக்காட்டு வாக்குகள் பதிவு! கருத்துக் கணிப்பில் மோடி அரசு கார்ப்பரேட்டுகளுக்கானது என்று

08,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  நடுவண் அரசில் நான்காண்டு பாஜகவின் நிலைபாடு குறித்து மக்களின் கருத்தறிய ஒரு தனியார் தொலைக்காட்சி மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது.  

அதில் பாஜக அரசு இந்த நான்கு ஆண்டுகளில் யாருக்காக இருந்திருக்கிறது என்ற கேள்விக்கு பொதுமக்கள் அளித்திருக்கிற வாங்கு அதிர்ச்சியூட்டுவாக அமைந்துள்ளது.

நான்கு ஆண்டுகளில் பாஜகவின் ஆட்சி எல்லோருக்குமானது என்று 12 விழுக்காடு பேர்களும்,

வழக்கமான அரசு என்று 25 விழுக்காடு பேர்களும், 

கார்ப்பரேட்களுக்கானது என்று 63 விழுக்காட்டு பேர்களும் கருத்து தெரிவித்து உள்ளார்கள்.

மோடி அரசின் துணிச்சல் பற்றிய கேள்விக்கு தைரியமான அரசு என 12விழுக்காட்டு பேர்களும், வழக்கமான அரசு என 26விழுக்காட்டு பேர்களும் மற்றும் பணக்காரர்களுக்கானது என 62 விழுக்காட்டு பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,858.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.