Show all

இரட்டை வேடத்தில் திரிசாவின் பேய்ப்படம்! மோகினி திரைக்கு வருகிறாள் வெள்ளிக் கிழமை

08,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  ஒரு முன்னணி கதைத்தலைவர் படத்துக்கு இணையாக, கதைத்தலைவியை மையமாக வைத்து உருவாக்கப்படும் படங்களும் தற்போது பெரும் வரவேற்பை பெறுகின்றன. ஆணும், பெண்ணும் சமம் என காட்சிகளிலும், குரல்வழியாகவும் பதிவு செய்வது மட்டுமே போதாது. பெண்ணுக்கான கதைகளை தனித்துவமாக உருவாக்கி, அது வழியே அவர்களது திறமையைப் பிரதிபலிப்பதும் கட்டாயம் என்கிறார், திரிசா நடிப்பில் 'மோகினி' திரைப்படத்தை இயக்கியுள்ள ஆர்.மாதேஷ். 

நிரந்தர இடம் கொண்டது காமெடி களம். அதுபோலவே, திகில் பின்னணிக்கு உலகம் முழுவதும் ஒரு சந்;;;தையும், எதிர்பார்ப்பும் எப்போதுமே இருக்கிறது. 'மோகினி' வெறும் திகில் படம் மட்டுமல்ல. சமூக பொறுப்பு, கூடவே நகைச்சுவை உணர்ச்சிபாடு, பாட்டு, சண்டை என எல்லாம் கலந்த கலவை திரைப்படமாக இருக்கும் மோகினி.

நான் சங்கரின் பட்டறையில் இருந்து வந்தவன் என்பதால், எப்போதும் கதையில் சமூக அக்கறை இருக்க வேண்டும் என விரும்புவேன். இங்கு சமூக அக்கறை உள்ள ஒரு கருத்தை, ஒரு பெண் சொல்வது இன்னும் வலிமை. இன்னும் நன்றாக மக்களைச் சென்றடையும். அப்படி நினைத்து எழுதிய கதைதான் இது. படம் தொடங்கிய சில மாதங்களுக்குப் பிறகு, லண்டனில் எதேச்சையாக நடிகர் மாதவனை சந்தித்தபோது, ''இந்தக் கதையை அப்படியே கதைத்தலைவனை வைத்து மாற்றி திரைக்கதை அமையுங்கள். நானே இந்தியில் நடிக்கிறேன்'' என்றார். கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.

இந்த படத்தின் 10 விழுக்காடு காட்சிகள் மட்டுமே இங்கு இடம்பெறும். மீதி படம் முழுவதும் லண்டனை கதைக் களமாகக் கொண்டது. கதைக் களத்துக்கு தேவைப்பட்டதால் லண்டன் சென்றோம்.

நடிப்போடு சேர்த்து அதிரடி காட்சிகளுக்கும் பொருத்தமான ஒரு நடிகை தேவைப்பட்டார். கயிற்றில் கட்டி தொங்குவது, மிரட்டலாக சண்டையிடுவது என சவாலான வேலைகள் இந்த கதாபாத்திரத்துக்கு உண்டு. அப்படி யோசிக்கும்போது, திரிசாதான் சரியான நபர் என்பதை இப்படத்தின் கதைக் களம்தான் தீர்மானித்தது.

நிச்சயம் திரிசாவின் நடிப்புத் திறமைக்கு தீனி போடும் படமாக இது இருக்கும். ஈடுபாட்டுடன் நடித்தார். இவ்வாறு மாதேஷ் கூறினார்.

 மோகினி குறித்து திரிசா:

மோகினி படத்தில் வைஷ்ணவி, மோகினி என எனக்கு ரெண்டு கதாபாத்திரம். ரெண்டுக்கும் பயங்கர வேறுபாடு தெரியும். நான் வேறொரு படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது இயக்குநர் மாதேஷ் இந்தக் கதையை 6 வரிகளில் எழுதி அனுப்பினார். படித்ததுமே பிடித்துவிட்டது. இதில் எனக்கு நல்ல எதிர்காலம் என்று தெரிந்தது. மனுசங்க மாதிரி, பேய்களும் இந்த உலகத்தில் இருக்குன்னு நம்புறேன். ஆனா எனக்கு பயமெல்லாம் கிடையாது.

மோகினி வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,858.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.