Show all

52 விழுக்காட்டு மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை! தமிழகத்தில் நடுவண் பொறியியல் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களில்

நடுவண் பாஜக அரசின் பொறியியல் நுழைவுத் தேர்வு இன்று அடாவடியாக நடத்தப்பட்ட நிலையில், தமிழகத்தின் 34 ஒரு தேர்வு மையத்தில்- ஒரு மையத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் கணக்கீட்டு அடிப்படையில்- விண்ணப்பித்ததில் 52 விழுக்காட்டு மாணவர்கள் தேர்வில் கலந்தது கொள்ளவில்லை.

16,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பரவல் தடுப்பு காரணம் பற்றி மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்படாததால் வேலூரில் நடைபெற்ற பொறியியில் நுழைவுத் தேர்வு மையத்துக்குத் தாமதமாக வந்த மாணவர் அனுமதிக்கப்படவில்லை என்பதால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளார்.

நாடு முழுவதும் நடுவண் பொறியியல் கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு இன்று தொடங்கி வரும் ஞாயிற்றுக் கிழமை வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 34 தேர்வு மையங்களில் தேர்வு தொடங்கிய நிலையில், வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் வளாகத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அன்றாடம் காலை மற்றும் பிற்பகல் என இரண்டு வேளை சுழற்சி நேர அடிப்படையில் மாணவர்கள் தேர்வில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேலூரில் இன்று காலை நடைபெற்ற தேர்வில் 168 பேர் பங்கேற்க வேண்டும் என்ற நிலையில் 77 பேர் கலந்துகொண்டனர். பிற்பகல் நடைபெற்ற தேர்வில் 234 பேரில் 115 பேர் மட்டும் கலந்துகொண்டனர். இன்று மட்டும் 210 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. 

தமிழகத்தில் இந்த தேர்வு காரணம் பற்றியே ஊரடங்கில் பேருந்துகளுக்குத் தளர்வுகள் அளிக்கப்பட்டு மாவட்டங்களுக்குள் பேருந்து சேவை இன்று தொடங்கியிருந்து என்றபோதும்கூட மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர் ஒருவர்  தாமதமாக தேர்வறைக்கு வந்து சேர்ந்ததால் தேர்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து தேர்வு மையம் வருவதற்கு முறையான பேருந்து வசதி இல்லாததால் தாமதமாக வந்த மாணவர் ரக்ஷன் சிங் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இது தொடர்பாக ரக்ஷன் சிங் என்ற மாணவன் கூறும்போது, தேர்வுக்காக ஆம்பூரில் இருந்து இன்று காலை 7 மணிக்கு பேருந்தில் ஏறினேன். ஆனால், அந்தப் பேருந்து 7.45 மணிக்குத்தான் புறப்பட்டது. ஆம்பூரில் இருந்து மாதனூர் வரை மட்டும் பேருந்தில் பயணிக்க முடிந்தது. அங்கிருந்து தானி மூலம் பள்ளிகொண்டா வந்தடைந்தேன். அதன்பிறகு வேலூருக்குப் பேருந்து இல்லாததால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களிடம் உதவி கேட்டு தேர்வு மையத்துக்கு வருவதற்கு காலை 9.30 மணியாகிவிட்டது. சிரமப்பட்டு வந்தும் தேர்வு எழுத முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. என்று தெரிவித்தார்.

மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தால், தேர்வு எழுதாமல் விட்ட அந்த 210 பேர்களும், தேர்வுக்கே விண்ணப்பிக்காத சில நூறு பேர்களும் தரத்தேர்வுக்கே முன்னெடுக்கப்படாத நிலை எழுந்திருக்காது. ஐம்பத்தி இரண்டு விழுக்காட்டு மாணவர்களை அம்போ என்று விட்டு விட்டு நடுவண் பாஜக அரசு முன்னெடுத்துள்ளது இந்த  அடாவடித் தேர்வை. இது என்ன வகையான தரமதிப்பீடோ? 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.