பேரறிமுக நகைச்சுவை நடிகையான வித்யூலேகா ராமனுக்கு சஞ்சய் என்பவருடன் திருமணம் உறுதியாகியுள்ளது. 16,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: பேரறிமுக நகைச்சுவை நடிகையான வித்யூலேகா ராமனுக்கு சஞ்சய் என்பவருடன் திருமணம் உறுதியாகியுள்ளது. கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா ராமன் இதையடுத்து தீயா வேலை செய்யனும் குமாரு, ஜில்லா, வீரம், புலி, வேதாளம், இனிமே இப்படித்தான் போன்ற படங்களில் நடித்து பேரறிமுகமானவர். இவர் தமிழைவிட தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் போரறிமுக குணசித்திர நடிகர் மோகன் ராமனின் மகள் ஆவார். நடிகை வித்யூலேகா ராமன் இந்த ஊரடங்கு சமயத்தில் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து அனைவருக்கு அதிர்ச்சி அளித்தார். இந்நிலையில், நடிகை வித்யூலேகா ராமனுக்கு சஞ்சய் என்பவருடன் திருமணம் உறுதியாகியுள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



