நடுவண் நிதியமைச்சர் அறிவித்த திட்டங்கள் ஏமாற்றம் அளிப்பவையாக உள்ளன. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கைவிடப்பட்டுள்ளன. வேளாண்பெருமக்களுக்கான நிவாரணம் இல்லை. ப.சிதம்பரம் கூறியதுபோல, மக்கள் கையில் பணப் புழக்கத்திற்கு, குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் அளிப்பது கட்டாயம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். 02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடுவண் நிதியமைச்சர் அறிவித்த திட்டங்கள் ஏமாற்றம் அளிப்பவையாக உள்ளன. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கைவிடப்பட்டுள்ளன. வேளாண்பெருமக்களுக்கான நிவாரணம் இல்லை. ப.சிதம்பரம் கூறியதுபோல, மக்கள் கையில் பணப் புழக்கத்திற்கு, குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் அளிப்பது கட்டாயம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். . இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை: நாடே மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நிதியமைச்சரின் அறிவிப்புகளை எதிர் நோக்கிக் காத்திருந்து, ஆனால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பினால் ஆறுதலை விட ஏமாற்றமே பெரிதும் மிஞ்சியது. 13 கோடி ஏழைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இதில் என்ன கிடைத்துள்ளது? அவர்கள் கையில் ரொக்கமாகப் பணப் புழக்கம் ஏற்பட நடுவண், மாநில அரசுகள் வழிவகை செய்வதுதான் - பொருளாதாரத்தில் பணப் புழக்கம் சரளமாகி, ஓரளவுக்கு இழப்பிலிருந்து நிவாரணம் அவர்களுக்குக் கிட்டக் கூடும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் கொடுத்தால், செலவு 65 ஆயிரம் கோடி ரூபாய்தான் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளதுபோல். முதலில் நடுவண் அரசு செய்யவேண்டியது என்னவென்றால், அடித்தட்டில் உள்ள 13 கோடி குடும்பங்களின் கைகளில் பணத்தைக் கொடுக்கவேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் கொடுத்தால், இதற்கு அரசுக்கு ஆகும் செலவு 65 ஆயிரம் கோடி ரூபாய்தான். நம் நாட்டிலிருந்து வங்கிகளில் கடன் வாங்கி ‘பட்டை நாமம்‘ போட்டுவிட்டு வெளிநாட்டில், இன்று சொகுசு வாழ்க்கை வாழும் விஜய் மல்லையாக்கள், நீரவ் மோடிகள், ‘யெஸ்’ வங்கியில் விளையாடிய வித்தகர்கள் எடுத்துள்ள தொகையை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவான அளவே. சரக்குசேவை வரியில் நடுவண் அரசு மாநிலங்களுக்கு தரவேண்டிய பாக்கி, நிலுவை - மாநிலங்களுக்கே உரிமையுள்ள நிதி. இது சலுகையோ, கொடையோ அல்ல. சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய். தமிழ்நாடு அரசு உள்பட மேற்கு வங்கம் போன்ற பல மாநிலங்களும் தொடர்ந்து இடையறாது தங்களுக்குரிய தொகையை உடனடியாகத் தர வற்புறுத்தியும் நடுவண் அரசுத் தரப்பில் செயல் மூலம் எந்த சாதக பதிலும் இதுவரை இல்லை. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 21 பெரிய மாநிலங்களுக்கு அவர்களது வருவாயில் ஏற்பட்டுள்ள ஊரடங்கு மூலமான இழப்பு ரூ.97,100 கோடிகள் ஆகும். முதன்மை மாநிலங்களான தமிழ்நாடு, குஜராத், தெலங்கானா, ஹரியாணா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்றவையும் இப்பட்டியலில் அடங்கும்.
தலைமைஅமைச்சர் மோடி மக்களுக்கு ஆற்றிய உரையில், கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து நாட்டின் அனைத்துத் தரப்புப் பொருளாதார நிலையும் மீள - மீட்டெடுக்கும் வழிமுறையாக நடுவண் அரசு 20 லட்சம் கோடி ரூபாய் சலுகைத் திட்டங்களைச் செயல்படுத்தும்; அவற்றை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என்று கூறியிருந்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



