20 கோடி பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.10,025 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக நடுவண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடுவண் பாஜக அரசு ஊரடங்கு நிவாரணத்திற்காக 20இலட்சம் கோடியில் ஒரு தொகுப்பை உருவாக்கியுள்ளது. அதற்கு ஹிந்தியில் ஏதோ பெயர் வைத்திருக்கிறது. அத்திட்டம் மோடியால் எட்டு மணி உரையில் அறிவிக்கப்பட்டு. நிர்மலா சீதாராமன் கடந்த சில நாட்களாகப் பட்டியல் இட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அந்த தன்னிறைவு இந்தியாவின் திட்டத்தில் கடைசி கட்ட சிறப்பு திட்டங்களை வெளியிட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஒரு செய்தி: வங்கியில் போடப்பட்டதாக சொல்லப்படும் தொகை: ரூ1,00,25,00,00,000 இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் தங்கள் மிடுக்குப் பேசிக்கு 84நாட்களுக்கு ரூ598 செலவிடுகிறார்கள்.
20 கோடி பெண்களின் ஜன்தன் வங்கிக்கணக்கில் 10,025 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது என்பதாகும்.
மகிழ்ச்சி!
அப்படியானால் ஒரு பெண்ணன் வங்கிக் கணக்கில் எவ்வளவு போடப்பட்டுள்ளது என்று கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு மகிழ்ச்சி தொடருமா என்று பார்ப்போம்.
போடப்பட்டக் கணக்குகள்: 20,00,00,000
அப்படியானால் ஒவ்வொருவர் கணக்கிலும் 501.25 காசுகள் போட்டதாக தெரிவிக்கிறார்கள். அதுவும் கொரோனா நிவாரணத்துத் தொகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்ட இந்த தொகை கடந்த ஆறு ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்டது.
நமது மாநில அரசு பெருமை பீற்றிக் கொள்ளாமல், இயல்பாகவே கடந்த ஆறு ஆண்டுகளில் 6000க்கு மேலாகவே தொகையாகவே நமக்கு கொடுத்திருக்கிறார்களே.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



