Show all

கோவையில் இருந்து 50 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்? ஸ்டாலின் ஆதங்கம்! இரண்டு கிழமைகள் காத்திருப்போம்.

தேர்தல் ஏழுகட்டமாக நடத்தப் படுகிறது; இரண்டு மாதமாக நடக்கிறது; பெரும்பான்மையோருக்கு நம்பிக்கை இல்லாத வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குப் பதிவு நடக்கிறது. ஆளும் கட்சியின் மீது எதிர்கட்சியின் புகார் தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப் படவேயில்லை. சம்பந்தமில்லாமல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் எங்கெங்கோ எடுத்துச் செல்லப் படுகிறது; நாம் விரும்பிய கட்சிக்கு போடும் வாக்கு வேறுகட்சிக்கு விழுவதாக குற்றச்சாட்டு இருக்கிறது. பெரும்பாலான வாக்குப் பதிவு  இயந்திரங்களில் கோளாறு இருந்தது; மக்களாட்சியில் நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் இரண்டு மாதங்கள் அச்சத்திலேயே இருக்க வேண்டும்.

25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கோவையில் இருந்து 50 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று இரவு தேனி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களையும், மையங்களையும் பாதுகாக்க சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: வாக்குப்பதிவு இயந்திரங்களையும், மையங்களையும் பாதுகாக்க மாநில சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும். ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது கண்டனத்துக்கு உரியது.

தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடு ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், மக்களாட்சிக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது. தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையிழந்து விட்டன. தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது கவலை அளிக்கிறது.

சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதற்கு தலைமைத் தேர்தல் அதிகாரி தடுமாறுகிறார். அவரது பேட்டி புதிய பிரச்சினைகளைத்தான் உருவாக்கியுள்ளது. 46 ஓட்டு சாவடிகளில் தவறு நடந்துள்ளதாகவும், மறு வாக்குப்பதிவுக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சத்யபிரதா சாகு கூறியுள்ளார். அங்கு நடந்த தவறுகள் என்ன என்பது பற்றிய விவரங்களையும், மறு வாக்குப்பதிவுக்கு பரிந்துரைத்த விவரங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.

வாக்குப்பதிவு இயந்திரங்களையும், மையங்களையும் பாதுகாக்க சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையம் சம்பந்தமே இல்லாதது போல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது கவலை அளிக்கிறது. சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் அதிகாரி சாகு தடுமாறுகிறார். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் ஆதங்கத்திற்கு மாநில அதிகாரியைக் குறை சொல்கிறார். ஒட்டு மொத்த நாட்டிலும் தேர்தல் ஆணையத்தின் மீது அதிருப்தி நிலவிக் கொண்டுதான் இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் உண்மைத் தன்மை நிரூபனமாக இன்னும் இரண்டு கிழமைகள் மட்டுமேயுள்ளன. பாஜகவும், அதிமுகவும் வென்றுவிடக் கூடாது என்பதை பெரும்பான்மையான தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி. ஒரு வேளை இவை இரண்டும் தமிழகத்தில் கணிசமாக வெற்றி பெறுமானால் தேர்தல் ஆணையத்தின் பொய்மை வெளிப்படும். ஆனால் யாரால் என்ன செய்ய முடியும்?

செயலலிதா அவர்களின் மரணத்திற்குப்பிறகு இந்த இரண்டு கட்சிகளின் சட்டத்தை வளைக்கும் பாங்கை சகித்துக் கொண்டுதானே இருந்தோம். மாநிலக் கட்சிகளின் கை ஓங்காத வரை நடுவண் அரசில் இருக்கும் கட்சியின் தகிடுதத்தங்களுக்கு கட்டுப்பட்டுதாம் இருந்தாக வேண்டும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,146.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.