Show all

கருத்துப் பரப்புதலில் பறந்தோடிய நடிகர் அனுபம் கெர்! நடந்தது என்ன?

நேற்று சண்டிகரில் மனைவிக்காக வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார் அனுபம்கெர். அப்போது தாரை தப்பட்டைகள் முழங்க, ஒரு கடைக்குள் வாக்கு சேகரிக்க  நுழைந்து, உடனடியாக திரும்பியது இணையத்தில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது.

25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிரபல வடக்கத்திய நடிகர் அனுபம் கெர். அவரது மனைவி கிரண் கெர் நடந்து வரும் தேர்தலில் போட்டியிடுகிறார். இதனால் மனைவிக்காக மும்முரமாக கருத்துப் பரப்புதலில் கணவர் ஈடுபட்டு வருகிறார். 

அப்படி நேற்று சண்டிகரில் மனைவிக்காக வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார் அனுபம்கெர். அப்போது தாரை தப்பட்டைகள் முழங்க, வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தவர் ஒரு கடைக்குள் நுழைந்து, மனைவிக்கு ஓட்டு போடும்படி கேட்டார். உடனே அந்தக் கடைக்காரர், தடாலடியாக ஒரு காகிதத்தை எடுத்து அனுபம்கெரிடம் நீட்டினார். அது வேறு ஒன்றுமில்லை. 

கடந்த முறை தேர்தலுக்கு பாஜக வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையேதான். அதை அனுபம் கெரிடம் நீட்டிய கடைக்காரர், பாஜக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகளாச்சு. இதுல இதுவரை எத்தனை வாக்குறுதிகளை பாஜக ஆட்சி நிறைவேற்றி இருக்கு? என்று கேட்டார். இப்படி ஒரு கேள்வியை அனுபம் கெர் உண்மையிலேயே எதிர்பார்க்கவே இல்லை. கடைக்காரருக்கு என்ன பதில் சொல்வதென்று திணறிய அனுபம் கெர், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று பாய்ந்தோடி விட்டார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,146.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.