Show all

இந்தியாவில் தங்கியுள்ள 40 லட்சம் வங்கதேசத்தவரை சுட்டுக் கொல்ல வேண்டும்: பாஜக சட்டமன்றஉறுப்பினர் ராஜா சிங்

16,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அசாமில் அண்மையில் வெளியான, தேசிய குடிமக்கள் பட்டியலில், 40 லட்சம் பேர் இடம்பெறவில்லை. இதனால் தாங்கள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படலாம் என்ற அச்சம், இவர்கள் நடுவே நிலவுகிறது.

இந்நிலையில், தெலுங்கானாவை சேர்ந்த பாஜக சட்டமன்றஉறுப்பினர் ராஜா சிங் லோத், கீச்சுவில் வெளியிட்டுள்ள காணொளியில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வங்கதேசத்தவர் உள்ளிட்டோர், தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி செல்ல வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும். அப்போது தான் இந்தியா பாதுகாப்பான நாடாக திகழும்.

இந்தியாவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வங்கதேசத்தவரை, அவர்களின் நாடுகளுக்கு அனுப்பி வைப்பது, நடுவண் அரசின் கடமை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வடக்கே மத அடிப்படை பாகிஸ்தானியரிடம் இருந்து மொழி அடிப்படையில் வங்காள மொழி பேசும் மக்கள் பங்களா தேசமாக தனிநாடு பெற்றனர்.

தெற்கே மத அடிப்படை சிங்கள பௌத்தர்களிடமிருந்து மொழி அடிப்படையில் தமிழீழ மக்கள் விடுதலை பெறும் தருவாயில் என்னென்னமோ நிகழ்த்தப் பட்டு விட்டது.

இந்தியாவில் வடக்கே வங்காள மொழி அடிப்படையும் தெற்கே தமிழ் மொழி அடிப்படையையும் இந்தியாவில் ஹிந்துத்துவா மத அடிப்படைக்கு தடையாக இருப்பதாக பாஜகவினர் கருதுகின்றனர்.

மத அடிப்படையில் இந்தியாவை ஹிந்து தேஷ் என மாற்ற முயலும் பாஜகவை அப்புறப் படுத்த வேண்டிய பொறுப்பு தமிழர்களுக்கும், வங்காளத்தவர்களுக்கும் தலையாய கடமையாகும், என்பதை உணர்த்து முகமானதே இந்தப் பாஜகவினரின் மொழி அடிப்படை எதிர்ப்பு முழக்கங்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,866.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.