கொரோனா நுண்ணுயிரியை நூறு விழுக்காடு ஒழித்துவிட்டுதாம் வெளியே வர முடியும் என்றால் அது சாத்தியமில்லை. கொரோனா நுண்ணுயிரியுடன் வாழ்வதற்குத் தயாராகுங்கள் என்று டெல்லி மக்களுக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவுறுத்தியுள்ளார். நடுவண் மாநில அரசுகள், இந்தக் கண்டுபிடிப்பை கண்டறிவதற்கு 40நாட்கள் ஊரடங்கு தேவைப்பட்டிருக்கிறது என்பது வரலாற்றுச் சோகமே. 21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா நுண்ணுயிரியை நூறு விழுக்காடு ஒழித்துவிட்டுதாம் வெளியே வர முடியும் என்றால் அது சாத்தியமில்லை. கொரோனா நுண்ணுயிரியுடன் வாழ்வதற்குத் தயாராகுங்கள் என்று டெல்லி மக்களுக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவுறுத்தியுள்ளார். இதை இனி எல்லா மாநில அரசுகளும், நடுவண் அரசும் தெரிவிக்கலாம், தெரிவிக்காமலும் விட்டு விடலாம். ஆனால் உண்மை அதுதான். அப்பாவித்தனமாக எதார்த்தத்தை சொல்லி மாட்டிக் கொள்வதுதானே கெஜ்ரிவால் இயல்பு. அவர் உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார். கொரோனா நுண்ணுயிரி பரவுவதைத் தடுக்கும் நோக்கம் என்பதாக, நாடு முழுவதும் இரண்டு கட்ட 40நாட்கள் ஊரடங்கு நேற்றுடன் முடிந்துவிட்டது. இன்று முதல் 3-வது கட்ட ஊரடங்கு சில கட்டுப்பாடுகள் தளர்வுடன் நடைமுறைக்கு வந்துள்ளது. அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் நடுவண் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதைப் பின்பற்றி பல்வேறு மாநிலங்களும் ஊரடங்குத் தளர்வை கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் இன்றுமுதல் நடைமுறைப்படுத்தி, மக்கள் நடமாட்டத்துக்கு அனுமதிக்கின்றன. டெல்லியில் பிறப்பிக்கப்பட்டிருந்த 40நாட்கள் ஊரடங்கு இன்று முதல் பல்வேறு இடங்களில் தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. கொரோனா நுண்ணுயிரியால் அதிகம் பாதிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மட்டும் மக்கள் நடமாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டு, மற்ற இடங்களில் கட்டுப்பாடுகளுடன் மக்கள் வெளியே வரவும், கடைகளைத் திறக்கவும் டெல்லி அரசு நேற்று வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது. இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் காணொலி மூலம் மக்களுக்கு நேற்று அறிவித்தார். அதில் அவர் பேசியதாவது: டெல்லியில் மீண்டும் மக்கள் நடமாட்டத்துக்கு அனுமதிக்கும் நேரம் வந்துவிட்டது. நாம் அனைவரும் கரோனா நுண்ணுயிரியுடன் வாழ்வதற்கு தயாராகிக் கொள்ள வேண்டும். நூறு விழுக்காடு கரோனா நோயாளிகள், நுண்ணுயிரி இல்லாத சூழலில்தான் டெல்லியில் மக்கள் நடமாட்டத்தை அனுமதிக்க வேண்டும் என்றால் அது சாத்தியமில்லை. நாம் அவ்வாறு வாழவும் முடியாது. நுண்ணுயிரி இல்லாத இடம் எங்குமில்லை. தற்போது டெல்லியில் உள்ள 11 மாவட்டங்களைச் சிவப்பு மண்டலமாக நடுவண் அரசு அறிவித்துள்ளது. ஆனால், தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மட்டுமே சிவப்பு மண்டலமாகவும் மற்ற பகுதிகளில் மக்கள் நடமாட்டத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று நடுவண் அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளோம். இன்று முதல் கட்டுப்பாடுகள் தளர்வுடன் டெல்லி மக்கள் அன்றாட வாழ்க்கையைத் தொடங்கலாம். அதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் இரு கிழமைகளுக்கு ஊரடங்கு நீடித்தாலும் சில விதிமுறைகளில் தளர்வு தந்துள்ளோம். கொரோனா நுண்ணுயிரியால் அரசுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏறக்குறைய 10 மடங்கு இழப்பை அரசு சந்தித்துள்ளது. மக்களின் நலனுக்காக கட்டுப்பாடுகளைத் தளர்த்தி அவர்களை நடமாட அனுமதித்துள்ளோம். இதைத் தவறாகப் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவெளியில் எச்சில் துப்புதல் அசுத்தம் செய்தால் கடும் தண்டனை விதிக்கப்படும். இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் வெளியே நடமாட அனுமதிக்கப்படமாட்டார்கள். திங்கள் முதல் அனைத்து தனியார், அரசு அலுவலகங்கள் திறக்க அனுமதிக்கப்படும். 33 விழுக்காடு ஊழியர்களுடன் பணியாற்றலாம். டெல்லியில் பேருந்து, மெட்ரோ ரயில், விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் இடங்களில் கட்டுப்பாடுகளுடன் 150 மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன. கட்டாயத்தேவைப் பொருட்களை வழங்கும் இயங்கலை வணிகம் தொடர்ந்து டெல்லியில் அனுமதிக்கப்படும். வணிக வளாகங்கள், திரையரங்கம், சந்தைகள், அழகுநிலையங்கள் மூடப்படும். கட்டாயத்தேவை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறக்கப்படும். தனிக்கடைகள் திறக்கலாம், ஆனால் குறைந்த அளவு பணியாளர்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையோடு பணியாற்ற வேண்டும், இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார். கொரோனா நுண்ணுயிரியை நூறு விழுக்காடு ஒழித்துவிட்டுதாம் வெளியே வர முடியும் என்றால் அது சாத்தியமில்லை. கொரோனா நுண்ணுயிரியுடன் வாழ்வதற்குத் தயாராகுங்கள் என்று டெல்லி மக்களுக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவுறுத்தியுள்ளார். நடுவண் மாநில அரசுகள், இந்தக் கண்டுபிடிப்பை கண்டறிவதற்கு 40நாட்கள் ஊரடங்கு தேவைப்பட்டிருக்கிறது என்பது வரலாற்றுச் சோகமே. கொரோனா என்பது விமானத்தில் வந்திறங்கி, (அதன் தொடக்கம் தெளிவான ஒற்றைப்பாதை) ஆனால் இதுவரை ஊரடங்கு என்ற பெயரில் சந்து பொந்துகளை அடைத்து மக்களின் தொழிலை, வணிகத்தை, வருமானத்தை 40 நாட்கள் முடங்கியது கொரோனாவிற்கு தொடர்பே இல்லாத பாதை.
மேல்தட்டு மக்களை ஊடகமாக்கிக் கொண்டு, (அதன் தொடர்ச்சி தெளிவான ஒற்றைப்பாதை)
பொதுப் போக்குவரத்துகள், ஒட்டு மொத்தக் கூடல்கள் மூலம் மக்களை வந்தடைந்தது.
ஊரடங்கின் மூலமாகவே பலவிடங்களில் மக்களின் மொத்தக்கூடல்கள் அரங்கேறின என்பது தனிக்கதை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



