தமிழகத்தில் 22 மாவட்டங்கள் கொரோனாஆட்சிமை சிவப்பு மண்டலப் பகுதிகளாக அறிவிப்பு. ஆனாலும் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில், மக்கள் அஞ்ச வேண்டாம்; ஆனால் சமூக இடைவெளியை மட்டும் கட்டாயம் கையாள வேண்டும். 03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், நெல்லை, கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், சேலம், நாகை, விருதுநகர் ஆகிய 22 மாவட்டங்கள் கொரோனா தொற்று அதிகம் பாதித்த கொரோனாஆட்சிமை பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று உள்ளவர்கள் 15 பேருக்கு மேல் உள்ள மாவட்டங்கள் கொரோனாஆட்சிமை மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 20ம் தேதி முதல் ஊரடங்கில் சில கட்டுபாடுகளை தளர்த்தி நடுவண் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் இந்த தளர்வானது கொரோனாஆட்சிமை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு பொருந்தாது என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், 17835 பேருக்கு இதுவரை தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. 2739 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 38 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 34 தொற்றினர் ஒற்றை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஆவர். மீதமுள்ள 4 பேரில் 3 பேர் தொடர்பில் இருந்தவர்கள். ஒருவர் மருத்துவர் ஆவார். இதன்மூலம் 38 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 37 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று வரை 81 பேர் குணம் அடைந்தனர். எனவே இன்று வரை தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 26 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. இந்தியாவிலேயே அதிக சோதனை ஆய்வகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு ஆகும். ஒரு நாளைக்கு மூன்று முறைப்பணியில் செயல்பட்டால் ஒரு நாளைக்கு 270 பேருக்கு அரசு மருத்துவமனை பரிசோதனை மையங்களில் பரிசோதிக்க முடியும். தனியார் மருத்துவமனை சோதனை மையங்களில் 100 பேரை சோதிக்க முடியும். எனவே 5320 பேரை ஒரு நாளைக்கு நம்மால் (தமிழகத்தில்) சோதிக்க முடியும். கொரோனாவின் தொடக்க காலத்தில் இருந்தே வல்லுனர்களை கலந்து ஆலோசித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். 146 கோடிக்கு ஆர்டர் கொடுத்து மருந்துகளை வாங்கினோம். அதன்பிறகு 204 கோடிக்கு மொத்தமாக மருந்துகளை வாங்கினோம். 3பிளேயர் முகக்கவசம், என்95 முகக்கவசம், மருத்துவர்களுக்கு தேவையான உபகரணங்கள் நம்மிடம் தேவையான அளவுக்கு இருப்பு உள்ளது. எந்த மாநிலத்தில் இல்லாத அளவுக்கு உள்ளது. 2லட்சம் 3பிளேயர் முகக்கவசம், உள்ளது. 20 ஆயிரம் என்95 முகக்கவசம், கொடுத்துவருகிறோம். தேவையான நிதி உதவிகளை அரசு கொடுத்துள்ளது. தற்போது ஒன்றரை லட்சம் நோயாளிகளைக் குணப்படுத்தும் அளவுக்கு தமிழக அரசின் கைவசம் மருந்து உள்ளது என்றார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



