Show all

ஊரடங்கால் இன்னுமொரு சோகம்! தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சரக்கு தொடர்வண்டி மோதி விபத்து. 17 பேர்கள் பலி

தெளிவான முன்திட்டமும், ஒற்றைக் காசு நிவாரணமும் இல்லாத நடுவண் பாஜக அரசின் அதிகாரப்பாட்டு ஊரடங்கால்- இயக்கபடாத நச்சுவாயு கொள்கலன் வெடித்ததில் 8பேர்கள் நேற்று பலியானதைத் தொடாந்து, இன்று தொடர்வண்டி மோதிய விபத்தால் 17 பேர்கள் பலியாகியுள்ளனர். 

 25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: மராட்டிய மாநிலத்தில் தங்கி வேலை பார்த்து வந்த மத்திய பிரதேச தொழிலாளர்கள் நேற்று- தெளிவான முன்திட்டமும், ஒற்றைக் காசு நிவாரணமும் இல்லாத நடுவண் பாஜக அரசின் அதிகாரப்பாட்டு ஊரடங்கு காரணமாக ஜல்னா பகுதியில் இருந்து சொந்த ஊரான புசாவல் நோக்கி தொடர்வண்டித் தண்டவாள பாதையில் நடந்து சென்றுள்ளனர். 
 
தொடர்வண்டிப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் எந்தத் தொடர்வண்டியும் வராது என்று நினைத்த, தொழிலாளர்கள் வெகுநேரம் நடந்த களைப்பில் அனைவரும் நேற்று இரவில் கர்மத் அருகே தண்டவாளத்திலேலே படுத்து தூங்கி உள்ளனர். இன்று அதிகாலையில் சரக்கு தொடர்வண்டி வந்தபோது அவர்கள் சுதாரித்து எழுவதற்குள் அவர்கள் மீது  தொடர்வண்டி மோதி கோர விபத்து ஏற்பட்டு உள்ளது.

இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 17 பேர்கள் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த தொடர்வண்டித் துறை காவலர்கள் மற்றும் உள்ளூர் காவலர்கள் நிகழ்வு இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.