ஈரோடு, சிவகங்கை, நாகை, திருப்பூர், தருமபுரி, கோவை, கன்னியாகுமரி, நீலகிரி, புதுக்கோட்டை, திருவாரூர், திருப்பத்தூர், கரூர், கிருஷ்ணகிரி ஆகிய பதின்மூன்று மாவட்டங்களில் தலா 5 க்கு குறைவானவர்களே சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 5409 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் வரை சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், நடப்பு மாத தொடக்கத்தில் இருந்து கோயம்பேடு பரவல் மூலம் அரியலூர், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவத்தொடங்கியது. முன்னதாக, 30 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த கடலூர் மாவட்டத்தில் தற்போதைய எண்ணிக்கை 330 ஆகும். அதேபோல், 6 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த அரியலூரில் தற்போது தொற்று எண்ணிக்கை 246 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வடமாவட்டங்களில் தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்கள் நடுவே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேவேளையில், தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ஐந்துக்கும் குறைவானவர்களே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, நாகை மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட 45 பேரில், 44 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ள நிலையில், ஒருவர் மட்டுமே சிகிச்சையில் இருக்கிறார். திருப்பூர் மாவட்டத்தில் 112 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 2 பேர் மருத்துவமனையில் உள்ளனர். அதேபோல், தர்மபுரியில் இதுவரை இரண்டு பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் சிகிச்சையில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 26 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 3 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவை, கன்னியாகுமரி, நீலகிரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் தலா 4 பேரும், திருவாரூர், திருப்பத்தூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் தலா 5 பேரும் சிகிச்சையில் உள்ளனர். இதை தவிர்த்து ஈரோடு, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தொற்றால் பாதிக்கப்பவர்கள் அனைவரும் குணமடைந்துள்ள நிலையில், தற்போது இவ்விரு மாவட்டங்களும் தொற்று இல்லாத மாவட்டங்களாக உள்ளன. தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள 5,409 பேரில், 1547 பேர் குணமடைந்துள்ளனர். 37 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் 3822 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில், இந்த 13 மாவட்டங்களில் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 39 மட்டுமே. இது ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் ஒரு விழுக்காடு என்பது நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. கொரோனாவில் பெரிதாக நம்மை காலைவாரி விட்டது, கோயம்பேடு நெருக்கம். அடுத்து டாஸ்மாக்கில் அந்த வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் தமிழக காவல்துறையினர் கடும்முயற்சியில் டாஸ்மாக்கில் நெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதைக் காண முடிகின்றது. ஆனாலும் தமிழகம் மட்டுமில்லாமல் அனைத்து மாநிலங்களிலும், மாநில அரசியல்வாதிகளிடம்- கொரோனாவில் அறுத்த கைக்கு சுண்ணாம்பு தராத நடுவண் அரசுக்கு அதிக அதிகாரங்கள் தேவையில்லை. என்கிற கொரோனா கற்றுத்தந்த பாடமாக, விழிப்புணர்வு எழவேண்டும் என்பதே நமது கனவு.
25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சென்னை, கடலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக இருந்தாலும், கோவை, திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஐந்துக்கும் குறைவானவர்களே சிகிச்சையில் உள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



