ஊரடங்கைத் தவிர்த்து ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளாத, ஒன்றிய பாஜக அரசால்- இந்தியாவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தில் இருக்கிறது. நாமாவது முன்னெச்சரிக்கையாக இருக்க, இந்த இருபத்தி மூன்று தகவல்கள். 12,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: ஊரடங்கைத் தவிர்த்து ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளாத, ஒன்றிய பாஜக அரசால்- இந்தியாவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தில் இருக்கிறது. ஒரு நாளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தைத் தாண்டுகிறது. மருத்துவமனைகளில் குறைவான இடம், உயிர்வளிப் பற்றாக்குறை, மருந்து, தடுப்பூசி தட்டுப்பாடு என்று பலவாறாக சிக்கல்கள் சூழ்ந்திருக்கின்றன. இந்நிலையில் மிக லேசான தொற்று பாதிப்பு இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. உங்களுக்கோ உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கோ லேசான அறிகுறிகளோடு கொரோனா தொற்று இருப்பின் அவர்களை வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கும் போது நீங்கள் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும் என்ன என்பதைத் தெரிந்து கொண்டாக வேண்டியது கட்டாயம் ஆகும். கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு கொரோனா இருக்கிறது என்று தெரிந்தவுடன் மருத்துவரிடம் கலந்தாலோசித்தே வீட்டுச் சிகிச்சைக் குறித்த முடிவை எடுக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் தன்னிச்சையாக இத்தகைய முடிவை எடுக்க வேண்டாம். பரிசோதனையும் மருத்துவ கலந்தாலோசனைகளும் மிகவும் முதன்மையானவை. கோவிட்-19 அறிகுறிகள்: காய்ச்சல், தொடர் இருமல், வாசனை திறன் இழப்பு, சுவை இழப்பு, மூச்சு விடுவதில் சிரமம், சோர்வு, தலைவலி, தொண்டை கரகரப்பு, உடல்வலி. வீட்டிலிருந்தபடியே கொரோனாவிலிருந்து மீளச் செய்ய- 1.உடனடியாக உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். 2.தனியாக எல்லா பொருள்களையும் பயன்படுத்துவது. தனி கழிப்பறை பயன்படுத்துவது எனப் பாதுகாப்பாக இருங்கள். 6.நிறைய ஓய்வெடுங்கள். 11.ஒரு நாளில் குறைந்தது பத்து முறையேனும் உங்கள் உடல் வெப்பநிலை மற்றும் உயிர்வளி அளவினைத் தொடர்ந்து கண்காணியுங்கள். 16.குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு, அனைவரும் வீட்டுச் சிகிச்சையிலிருந்தாலும், உங்களுக்குள் தனிமைப்படுத்துதலைக் கடைப்பிடியுங்கள். 21.வாயை மூடிக்கொண்டு, மெதுவாக மூக்கின் வழியே காற்றைச் சுவாசித்து, வாயின் வழியே காற்றை வெளியேற்றி மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்.
3.பழச்சாறு போன்ற திரவ உணவு அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். அதிக புரதச் சத்துள்ள உணவினை உட்கொள்ளுங்கள்.
4.நிறையத் தண்ணீர் குடியுங்கள். ஒரு நாளில் 8 லிருந்து 10 குவளை வரை தண்ணீர் அருந்த வேண்டும்.
5.உங்கள் சிறுநீர் எப்போதும் தெளிவாக வெள்ளை நிறத்தில் இருக்கிறதா எனக் கவனியுங்கள்.
7.லேசான தலைவலி, காய்ச்சல் இருப்பின் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்துவிட்டு 'பாரசிட்டமால்' மருந்தினை உட்கொள்ளுங்கள்.
8.தொண்டை கரகரப்பிற்கு எலுமிச்சம் சாறு மற்றும் தேன், இருமல் மருந்து, சளிக்கு ஆவி பிடித்தல் போன்ற வழக்கமான வீட்டுச் சிகிச்சை முறைகளைப் பின்பற்றுங்கள்.
9.சானிடைசர் பயன்படுத்தும்போது அதில் ஆன்டிவைரல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதா என செக் செய்து கொள்ளுங்கள். அல்லது அதில் 60 விழுக்காட்டிற்கு மேல் ஆல்கஹால் உள்ளதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள்.
10.ஏழு நாள்களுக்கு மேல் ஆகியும், உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
12.கோவிட் 19 ஒரு நுண்நச்சு. அதற்கு எதிராக வீட்டிலிருக்கும் ஆண்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தாதீர்கள். ஆன்டிபாக்டீரியல் கிருமி நாசினிகளும் பயனளிக்காது.
13.மருத்துவரின் பரிந்துரையின்றி ரெமிடிஸ்விர், ஸ்டெராய்டு மருந்துகளை உட்கொள்ளாதீர்கள்.
14.உங்களுக்கு கோவிட்-19 இருக்கிறது என்றோ, இல்லையென்றோ நீங்கலாக ஒரு முன்முடிவிற்கு வராதீர்கள். முறையாகப் பரிசோதித்துக் கொள்வது அவசியம்.
15.உங்களுக்கு இருக்கும் அறிகுறிகளை மருத்துவரிடம் சொல்லிக் கலந்தாலோசித்துக் கொண்டு வீட்டில் இருப்பதா, அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதா என முடிவெடுங்கள்.
17.மது அருந்துவதைத் தவிருங்கள். அது உங்களை நீரிழப்புக்கு (னநாலனசயவந) உள்ளாக்கும். மேலும், கொரோனா நோய் தொற்று இருப்பவர்கள் மது அருந்தினால் கல்லீரல் பாதிப்படைய நிறைய வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
18.வீட்டினுள் நடமாடினால் கட்டாயம் முகமூடி அணியுங்கள். அடிக்கடி கை கழுவுங்கள்.
19.வேறொருவருக்கு கொரோனா பாதித்து, அவருக்கு மருத்துவர் பரிந்துரைத்த அதே மருந்துகளை நீங்களும் வாங்கி உட்கொள்வது ஆபத்தானது. ஒருவருக்கு ஒரு மருந்து கொடுக்கலாமா கூடாதா என்பதை மருத்துவர் மட்டுமே முடிவு செய்ய முடியும்.
20.கொரோனா பாதித்த ஒருவர், குறைந்தது 14 நாள்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியது அவசியம்.
22.மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு பகுதியில் வலி, அழுத்தம், முகம் மற்றும் உதடுகள் நீல நிறமாக மாறுதல், விழித்திருக்க முடியாமல் இருப்பது போன்ற எந்த அறிகுறிகள் தென்பட்டாலும் உடனே மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.
23.கொரோனா ஒரு கொடிய நோய்த்தொற்று என்பதில் சந்தேகமில்லை. அதற்காக யாரும் அஞ்சுவதில்லை பலனில்லை. மாறாக முறையான முன்னெச்சரிக்கை நடைமுறைகள், பாதுகாப்பு வழிமுறைகள், மருத்துவர்களின் வழிகாட்டுதல்கள் இவற்றைப் பின்பற்றுவது கட்டாயம். அதுவே நமக்கும், நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்குமான பாதுகாப்பிற்கு உத்தரவாதம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.