Show all

எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் சமமான தகுதி வழங்குக! கனிமொழி கவனஅறிக்கை

ஹிந்தி மொழியால் நாடு ஒன்றிணைகிறது என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித்சா காணொளி வாயிலாக தெரிவித்திருந்த கருத்துக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசுவாமி ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்துள்ள செய்திகள் கீச்சுவில் இந்திய அளவில் தலைப்பாகி வருகின்றன. எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிக்கும் சமமான தகுதி வழங்குவது குறித்து விவாதிக்க கனிமொழி கவனஅறிக்கை கொடுத்துள்ளார்.

30,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகம் முன்னெடுத்த ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், திமுக முன்னெடுத்த தொடர்முயற்சிகளால் ஹிந்தி ஆங்கிலம் மட்டுமே இந்தியாவின் அலுவல்மொழிகள் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டிருந்த நிலை மாற்றப்பட்டு அட்டவணை எட்டில் சொல்லப்பட்ட பின்வரும் 22மொழிகளுக்கும் இந்தியாவின் அலுவல் மொழித் தகுதி வழங்கப்பட்டது. ஆனாலும் ஒன்றிய  அரசில் ஆண்ட கட்சியான காங்கிரசும், ஆளுகின்ற கட்சியான பாஜகவும் தொடர்ந்து ஹிந்திக்கு சிறப்பு தகுதி வழங்கி, ஹிந்திக்கு மட்டும் ஒன்றிய அரசு சார்பாக ஹிந்தி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

1.தமிழ் 2.அசாமி 3.வங்காளம் 4.ஹிந்தி 5.காஷ்மீரி மொழி 6.கொங்கணி மொழி 7.மலையாளம் 8.மணிப்புரி 9.மராத்தி 10.நேபாளி 11.ஒரியா மொழி 12.பஞ்சாபி 13.சமசுகிருதம் 14.சிந்தி 15.கன்னடம் 16.தெலுங்கு 17.உருது 18.மைதிலி மொழி 19.போடோ மொழி 20.சந்தாளி மொழி 21தோக்ரி மொழி 22.குசராத்தி என அட்டவணை எட்டு மொழிகள் இருபத்தி இரண்டுக்கும் ஒன்றிய அரசில் சமமான தகுதி பேண வேண்டும். என்பது  தொடர்பாக பாரளுமன்றத்தில் விவாதித்திட திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஒத்திவைப்பு தீர்மான கவனஅறிக்கை கொடுத்துள்ளார்.

கருநாடகத்தில் இதே தலைப்பில் கருநாடக மக்களால் இன்று போராட்டம் நடத்தப்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத் தகுந்தது.

சுந்தர் பிச்சை என்கிற ஒரு தமிழன் தலைமையில் இயங்குகிற கூகுள் நிறுவனத்தில் 108 மொழிகளில் அனைத்து தகவல்களையும் பெற முடிகின்றது. ஆனால் வெறுமனே இருபத்தி இரண்டு மொழிகளை அலுவல் மொழிகளாகப் பேணிட விருப்பம் இல்லாமல் மற்ற 21 மொழியினர் மீதும் ஹிந்தியை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது ஒன்றிய பாஜக அரசு. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.