கேரளாவில் மிக துரிதமாக கொரோனா சோதனைகள் செய்யப்படுகின்றன. இதுவரை 6000 பேர் அங்கு கொரோனா சோதனைக்கு உள்ளாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா சோதனையில் கேரளா முதல் இடத்தில் இருக்கிறது. 16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று அறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கேரளாவில்தான் அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 202ஐ தொட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1053 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனா காரணமாக 6 பேர் பலியாகி உள்ளனர். கேரளாவிற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 196 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதற்கு அடுத்து கர்நாடகாவில் 81 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் கொரோனா சோதனைகளை அதிகம் செய்த மாநிலம் கேரளாதான். இதுவும் கூட அங்கு அதிக கொரோனா நோயாளிகள் உடனடியாக தெரியவருவதற்கு காரணம் ஆகும். கேரளாவில் மிக துரிதமாக கொரோனா சோதனைகள் செய்யப்படுகின்றன. இதுவரை 6000 பேர் அங்கு கொரோனா சோதனைக்கு உள்ளாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா சோதனையில் கேரளா முதல் இடத்தில் இருக்கிறது. கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்டு இருந்த 202 பேரில் ஒருவர் பலியாகிவிட்டார். 20 பேர்கள் குணமடைந்து வீடு திரும்பியுளளனர். மீதம் 181 பேர் மருத்துவமனையில் உள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



