25,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா அவர்கள் மறைவிற்குப் பிறகு, தினகரன் சசிகலா ஆதரவோடு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிறுவ எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். ஆனால் அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உட்பட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அவர்கள் எல்லோரும் அப்போதைய கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தனர். ஆனால் அவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பேரவைத் தலைவர் இவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யவும் இல்லை. ஆனால், அதற்குப் பிறகு பன்னீர் உள்ளிட்ட அந்தப் பதினோறு போரோடு எடப்பாடி உறவு வைத்துக் கொள்ளப் போகிறார் என்பது தெரிந்து, ஆளுநரிடம் முதல்வருக்கு எதிராக கடிதம் கொடுத்த தினகரன் ஆதரவு சட்டமன்றஉறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த அடிப்படையில், அந்த பன்னீர் உள்ளிட்ட 11 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக சார்பாக சென்னை உயர் அறங்கூற்று மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் உயர்அறங்கூற்றுமன்ற தீர்ப்பில், பேரவைத் தலைவரின் தீர்ப்பில் தலையிட முடியாது என்று கூறப்பட்டது. இதற்கு எதிராக தினகரனும், திமுகவும் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மனு கொடுத்தனர். இதற்கு எதிரான வழக்கு மீது இன்று விசாரணை நடந்தது.. 18 சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. தற்போது உச்ச அறங்கூற்றுமன்றம் பன்னீர் உள்ளிட்ட 11 பேர்கள் தகுதி நீக்க வழக்கில் பதில் அளிக்கும்படி, தமிழக சட்டசபை பேரவைத்தலைவருக்கும், அதேபோல் இந்த வழக்கில் 11 சட்டமன்றஉறுப்பினர்கள், சட்டசபை செயலாளர், கொறடா எல்லோரும் பதில் அளிக்க வேண்டும் என்று கவனஅறிக்கை அனுப்பியுள்ளது. இன்னும் இழுபறியாக இருக்கும் 18 பெருசா? 11 பெருசா? என்கிற குழப்பமான கேள்விக்கு எப்போது உண்மையான விடை கிடைக்கும் என்று தமிழக மக்களும், திமுகவும், மற்ற மற்ற கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். ஏனென்றால்? உண்மையான விடை கிடைத்தால் ஆளும் அதிமுக அரசு ஆட்சி இழக்கும்! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,843.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



