25,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக சட்டமன்றக் கூட்டதொடரில் கடைசி நாளான இன்று லோக் ஆயுக்தா மசோதா பதிகை செய்யப்பட உள்ளது. இந்த சட்டத்தின் படி முதல்வரையும் விசாரிக்க முடியும். தமிழக வரவு-செலவு சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவிற்கு வந்துள்ளது. இந்த நிலையில் கடைசி நாளான இன்று, சட்டசபையில் ஊழலுக்கு எதிரான லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. லோக் ஆயுக்தா தாக்கல் செய்ய உச்ச அறங்கூற்றுமன்றம் கெடு விதித்து இருந்தது. பெரும்பாலான மாநிலங்கள் இந்த மசோதாவை தாக்கல் செய்துவிட்டன. இந்த நிலையில் அறங்கூற்றுமன்றம் விதித்த கெடு நாளையுடன் முடிகிறது. கடந்த கிழமை நடைபெற்ற கூட்டத்தின் போதே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இந்த நடப்பு கூட்டத் தொடரிலேயே லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும் என்று திமுக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதனால் இன்றைய கூட்டத்தொடர் முதன்மைத்துவம் பெற்றது. நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடர், இன்றுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லோக் ஆயுக்தா மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் பதிகை செய்தார். எதிர்க்கட்சிகள் யாரும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மசோதா மீது இன்று மதியம் விவாதம் நடைபெற உள்ளது. இதில் எப்படிப்பட்ட சட்டங்களை கொண்டு வரலாம் என்று விவாதிக்கப்படும்,. இந்தியாவில் இதுவரை 17 மாநிலங்கள் இந்த மசோதாவை நிறைவேற்றி உள்ளன. தமிழகத்தில் 18ஆவது மாநிலமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் படி, இந்த சட்ட வரம்பிற்குள் முதல்வரும் வருகிறார். இதனால் இந்த சட்டத்தின் படி முதல்வரையும் விசாரிக்க முடியும். அதேபோல் அமைச்சர்கள், அதிகாரிகளையும் விசாரிக்க முடியும். மேலும் இதில் விசாரிக்கப்படுபவர்களின் பெயர்கள் பொதுவில் வெளியிடப்படும். வானளாவ அதிகாரம் உள்ள, இந்தியத் தலைமை அமைச்சர் நடுவண் அமைச்சர்களை விசாரிக்க லோக்பால், லோக் ஆயுக்தா என்றெல்லாம் தொடங்கி, மாநில அதிகாரங்களை முடக்குவதில் முடித்துக் கொள்கிறது நடுவண் பாஜக அரசு. இருக்கிற சட்டங்களிலேயே தானே செயலலிதா அவர்களை முடிக்கி, வாழ்க்கையைக் கூட முடிக்க முடிந்தது. அப்புறம் என்ன வேண்டிக் கிடக்கிறது மாநில முதல்வர்களை விசாரிப்பதற்கு தனியாக சட்டம். வானளாவ அதிகாரம் உள்ள, நடுவண் அமைச்சர்களை, இந்திய தலைமை அமைச்சரை விசாரிப்பதற்கல்லவா உண்மையில் சட்டம் கொண்டு வரவேண்டும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,843.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



