கடும் எதிர்ப்புகளுக்கு நடுவே, நாடு முழுவதும் இன்று பதினாறு இலட்சம் மாணவர்கள், கொரோனாவையும், நடுவண் பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வையும் எதிர்கொள்ள, அடாவடி நடுவண் பாஜக அரசு கவலையில்லாமல் களம் இறக்கியிருக்கிறது. 16,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: கடும் எதிர்ப்புகளுக்கு நடுவே, நாடு முழுவதும் இன்று பதினாறு இலட்சம் மாணவர்கள், கொரோனாவையும், நடுவண் பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வையும் எதிர்கொள்ள அடாவடி நடுவண் பாஜக அரசு கவலையில்லாமல் களம் இறக்கியிருக்கிறது. இந்தக் களப்போரில் இன்று முதல் ஞாயிற்றுக் கிழமை வரை ஆறு நாட்கள் மேற்சொன்ன பதினாறு இலட்சம் மாணவர்கள், தத்தளிக்கவிடப்படுவார்கள். ஐஐடி, என்ஐடி, நடுவண் அரசின் நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பயில விண்ணப்பத்தவர்களைச் சலித்தெடுக்கும் முறைக்காக இந்த நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்தக் களமாடல் குறித்து பெரிதாக கவலை கொள்ளத் தேவையில்லைதாம். ஏனென்றால் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் பெரும்பான்மையோர் மேல்;தட்டு மக்களே. இந்த மாணவர்களுக்கென்று சொந்தமாக கார்களே இருக்கும். ஆனால் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுதாம் மிகவும் ஆபத்தானது. அந்தத் தேர்வு நாளது 28,ஆவணியன்று (செப்படம்பர் 13) நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பீதி, வெள்ள பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் பெரும்பான்மை பாமர மாணவர்கள் களம் இறங்கும் நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கைகள் வலுக்கின்றன. இந்தத் தேர்வை ஒத்தி வைக்க புதுவை, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் மறு சீராய்வு மனுவை பதிகை செய்துள்ளன. தேர்வுகளை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்திய மாணவர்களுக்கு ஆதரவாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க்கும் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இந்த நிலையில் பொறியியல் தேர்வில் பதினாறு இலட்சம் மாணவர்களை களம் இறக்கி விட்ட நடுவண் பாஜக அரசு நீட்டைத் தனியாக இரத்து செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்றைய தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு ஏதாவது கொரோனா பாதிப்பு ஏற்படுமானால் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட முடியும் என்பதற்கும் வாய்ப்பு இல்லை. ஏனென்றால் இன்றிலிருந்து ஆறு நாட்கள் கொரோனா மற்றும் தேர்வுக் களத்தில் போராடவுள்ள மாணவர்களுக்கு- பாதிப்பு ஏற்பட்டாலும் அது வெளியாவதற்குள் நீட் தேர்வை நடத்தி முடித்துவிடும் நடுவண் பாஜக அரசு. பாதிக்கப்படும் மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி தெரிய பதினான்கு நாட்களுக்கு மேல் தேவைப்படும். ஆனால் பதின்மூன்றாவது நாளிலேயே நீட் மாணவர்களை களத்தில் இறக்கிவிடும் நடுவண் பாஜக அரசு. அப்புறம் கொரோனா வந்தால், மாணவர்கள் பாடு, பெற்றோர்கள் பாடு, மாநில அரசுகளின் பாடு, மாநில அரசுகளின் நலங்குத்துறையினரின்பாடு. கொரோனா பாதிப்பு நிவாரணத்தில் ஒரு ஆணியும் பிடுங்காத நடுவண் பாஜக அரசுக்கு என்ன கவலை வேண்டிக் கிடக்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



