Show all

ஆர்வக் கோளாறா- பரிசோதனையில் தோற்றுப் போனதா! இந்தப் பதினாறு இலட்சம் விலைகொடுத்து வாங்கிய பைக்

மோசமான இந்தியச் சாலைகளைச் சமாளிப்பதற்கு ஏற்ற பயணவகை வண்டியென்றாலும், சாகசத்தையே முதன்மைப் படுத்துகின்றன தயாரிப்பு நிறுவனங்களும், வாங்கும் ஆர்வக் கோளாறு இளைஞர்களும்.

09,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: படிகட்டு, மலை, கரடுமுரடான சாலைகளில்; ஓட்டுகிற வகையான வண்டிகள் மீது தற்போது இளைஞர்களுக்கு ஆர்வம் மிகுந்துள்ளது. அந்த ஆர்வத்திற்குத் தீனி போடுகிற வகையாக வடிவமைக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக், 87 ஆயிரம் அலகுகளுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ஆப்ரிக்கா ட்வின் பைக்கை ஹோண்டா நிறுவனம் அண்மையில் புதுப்பிப்பு செய்தது. முந்தைய மாதிரிகளுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு மாதிரி ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்கில் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் சக்தி வாய்ந்த இயக்கப்பொறி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் படிகட்டு, மலை, கரடுமுரடான சாலைகளில்; ஓட்டுகிற வகையான பயணங்களுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. 

சுற்றுலா, நகரம், கரடுமுரடு மற்றும் அமைக்கப்படா சாலை உள்பட மொத்தம் ஆறுவகை ஓட்டப் பயன்முறைகள் வழங்கப்பட்டுள்ளன. 

மேலும் திருப்புதல், வளைத்தல், பின்சக்கரத்தை உயர்த்துதல் எனப் பல வசதிகளையும் நடப்பாண்டு ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் பெற்றுள்ளது. 

நடப்பாண்டு ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்கின் மேனுவல் வகையின் விலை 15.35 லட்ச ரூபாய் எனவும், டிசிடி வகையின் விலை 16.10 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டும் பழைய காட்சியக விற்பனை விலை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மற்றும் விலை உயர்ந்த ஒரு பைக்கை வாங்கி பயணத்தைத் தொடங்கும்போது, மனதில் மகிழ்ச்சி பொங்குவது இயல்புதான். ஆனால் அந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது. 

அண்மைக் காலமாக புதிய வாகனங்களை பெற்றுக்கொள்ளும் போதுகளில், ஒரு சில விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. கடந்த ஒரு சில கிழமைகளுக்கு முன்னர், கியா கார்னிவல் பிரீமியம் எம்பிவி ரக காரை ஒருவர் பெற்றுக் கொண்டார். அப்போது விற்பனை காட்சியகத்தின் பக்கவாட்டு சுவரில் அந்த கார் மோதியது. இதன் காரணமாக காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. விற்பனைக் காட்சியகத்தை விட்டு வெளியே வருவதற்கு முன்னதாகவே நடந்த இந்த நிகழ்வன் காணொளி சமூக வலை தளங்களில் தீயாகிய நிலையில், அதே பாணியில் மற்றொரு நிழ்வு தற்போது அரங்கேறியுள்ளது. 

நடப்பாண்டு மாதிரி ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்கை வாடிக்கையாளர்களுக்கு கையளிப்புக் கொடுக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இதன்படி அண்மையில் இளைஞர் ஒருவர் அந்த பைக்கை பெற்றுக் கொண்டார். 

விரும்பிய பைக் கைக்கு கிடைத்த உற்சாகத்தில், காட்சியகப் படிக்கட்டுகளில் பைக்கை ஓட்டி வெளியே வருவதற்கு அவர் முடிவு செய்தார். இதன்படி பைக்கை படிக்கட்டுகளின் வழியாக ஓட்டும் போது, முன்பக்க சஸ்பென்ஷன் மிக அதிகமாக சுருக்கம் ஆனதால், தரைதொடு இடைவெளி குறைந்து விட்டது. இதன் விளைவாக கடைசியில் இருந்த ஒரு படிக்கட்டில், பைக்கின் பாஸ் பிளேட் பயங்கரமாக மோதியது. இதனால் அந்த படிக்கட்டு உடைந்து நொறுங்கியது. எனினும் பைக்கை ஓட்டிய ஓட்டுனருக்கோ அல்லது பைக்கிற்கோ எந்தவிதமான சேதாரமும் ஏற்படவில்லை. சமூக வலை தளங்களில் தற்போது இந்த காணொளி தீயாகி வருகிறது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.