Show all

அறுவடை செய்யுமா பாஜக! யார் கற்றுக் தருகிறார்கள் பாஜகவினர்களுக்கு? தமிழகத்தில் குறும்பர்களை நம்பி அரசியல் நடத்த

தமிழத்தில் பாஜக அரசியல் நடத்த தொடர்ந்து குறும்பர்களையே நம்பி வருகிறது. அந்தக் குறும்பர்களும் சகட்டுமேனிக்கு கண்டபடி பேசுவது, இணையத்தில் அருவருப்புக் கருத்துக்களைப் பதிவேற்றுவது, தலைவர் சிலைகளை அசிங்கப்படுத்துவது என்று ஆட்டம் போட்டு வருகிறார்கள்.

09,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: பாஜக குறும்பர் குழாம், அடையாளம் தெரியாத யாரோ என்ற போர்வையில், புதுச்சேரியில் முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவித்துள்ளனர். இந்நிகழ்விற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி விழுப்புரம் புறவழி சாலையில் வில்லியனூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் இன்று காவி துண்டு அணிவித்து விட்டு சென்றுள்ளனர்.

இந்த நிகழ்வு அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மையில் கோவையில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் அனைவரும் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். இந்த நிகழ்வு தொடர்பாக பாரத் சேனா என்ற அமைப்பைச் சேர்ந்தவன் என்று பெருமிதமாக, இளம் அகவைத் தம்பி ஒருவன் கோவை காவல் நிலையத்தில் சரணடைந்தார். சமூக அமைதியை சீர் குலைத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் தற்போது புதுச்சேரி எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் இதயதெய்வம் புரட்சித்தலைவர் மாண்புமிகு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு புதுச்சேரியில் மர்மநபர்கள் காவித்துண்டு அணிவித்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க புதுச்சேரி அரசினை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று கீச்சுப் பதிவிட்டுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.