Show all

வேளாண் சட்டங்கள் கார்ப்ரேட்டுக்கள் நலனுக்கானதே என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது பாஜகவின் பிடிவாதம்! 15வது நாளாக தொடரும் உழவர் போராட்டம்

உழவர்கள் இன்று 15 நாளாக இந்தச் சட்டம் தங்களுக்கானது இல்லை என்று கடுமையாக குளிரிலும் மழையிலும் போராடும் நிலையிலும், பாஜக அந்தச் சட்டங்களை விலக்கிக் கொள்ள  மறுத்து பிடிவாதம் காட்டுவது- வேளாண் சட்டங்கள் கார்ப்ரேட்டுக்கள் நலனுக்கானதே என்பதை உறுதிப்படுத்;;;துவதாக இருக்கிறது

25,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்த குறிப்பிட்ட கார்ப்ரேட்டுகளுக்கு ஆதரவான (அனைத்து கார்ப்பரேட்டுகளுக்கும் அல்ல) வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் உழவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் 15வது நாளை எட்டியுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்று உழவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

ஒன்றிய பாஜக அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உழவர்கள் தலைநகர் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். கடும் குளிரை பொருட்படுத்தாமல் உழவர்கள் இரவு, பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உழவர்களின்  இந்தப் போராட்டம் காரணமாக தலைநகர் டெல்லி நெருக்கப்பட்டுள்ளது. மேலும் உழவர்களின் இந்த போராட்டம் உலக நாடுகளையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டு வரும் மாய்மாளங்கள் உழவர்களால் புரிந்து கொள்ளப்பட்;டு தோல்வியில் முடிந்தன. இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் உழவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் இன்று 15வது நாளை எட்டியுள்ளது. இதனிடையே லட்சக்கணக்கான உழவர்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பல மாநிலங்களிலும் உழவர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.