ஜனநாயக சீர்திருத்த சங்கம் இந்தியா முழுவதும் உள்ள 776 பாராளுமன்ற உறுப்பினர்களில் 774 பேர்கள் மற்றும் 4,120 சட்டமன்ற உறுப்பினர்களில் 4,078 பேர்களின் தேர்தல் வேட்புமனுக்களை ஆய்வு செய்துள்ளது. அதில் 1,581 பேர் தங்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகள் உள்ளதை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளனர். அதில் 51 பேர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன. 4 பேர்கள் மீது பாலியல் பலாத்கார வழக்குகள் உள்ளன. இருப்பதிலேயே பாஜகவில் தான் பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டு உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகம் உள்ளனர். பாஜகவில் 14பேரும் சிவ சேனாவில் 7 பேரும், திரிணாமூல் காங்கிரஸில் 6 பேரும் உள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்திலும் பாஜக முதலிடத்தில் உள்ளது. பாஜக பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டவர்களில் 48 பேருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பாலியல் பலாத்கார வழக்கு உள்ள 29 வேட்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



