நாடாளுமன்றத்தில்
உள்ள 50வது அறையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. டெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள 50வது அறையில் திடீரென்று
தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நாளை பொது வரவு-செலவு தாக்கல் செய்யும் நிலையில் தீ விபத்து
ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இரவு தீ விபத்து
ஏற்பட்டது. நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள அறை எண் 50ல் திடீரென தீ பிடித்து அங்கிருந்து
புகை வந்துள்ளது. இதைப் பார்த்தவர்கள் உடனே இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல்
கொடுத்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 12 வாகனங்களில் விரைந்து வந்து தீயை கட்டுக்குள்
கொண்டு வந்தனர். நாளை பொது வரவு-செலவு தாக்கல் செய்ய உள்ள நிலையில்
இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்திற்கான
காரணம் குறித்து தகவல் உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்தில் யாரும் காயம் அடைந்ததாக
தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



