Show all

நன்றிகள்! தமிழர்எதிர்ப்பு வட்டாள்நாகராஜை புறமுதுகிட்டு ஓட விரட்டிய கர்நாடக மக்களுக்கு

01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சாம்ராஜ் நகர் தொகுதியில் வெறுமனே 5648 வாக்குகள் மட்டுமே பெற்று படுகேவலமாக தோற்ற வாட்டாள் நாகராஜ்

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வாட்டாள் நாகராஜ் படுதோல்வியடைந்துள்ளார். கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் வாட்டாள் நாகராஜ் படுதோல்வியடைந்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் எப்போதும் தமிழர்களுக்கு எதிராகவும் தமிழகத்துக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர் வாட்டாள் நாகராஜ். தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவது தமிழக சுமையுந்து ஒட்டுநர்களை அடித்து துன்புறுத்துவது உள்ளிட்ட செயல்களில் இவரது அமைப்பை சேர்ந்தவர்களே முன்னிலை வகிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களுக்கு எதிரான இந்த வன்முறைகளுக்கு கர்நாடக மக்களின் ஆதரவில்லை என்பதை சிம்புவின் தண்ணீர் கேட்பு வேண்டுகோளின் போதே உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தியவர்கள் கர்நாடக மக்கள். 

இப்போது படுகேவலமாக வட்டாள் நாகராஜைத் தோற்கடித்து மீண்டும் ஒருமுறை, தமிழர்களுக்கெதிரான வன்முறையில் கர்நாடக மக்களுக்கு உடன்பாடில்லை என்பதைத் தெரிவித்திருக்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,788. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.