30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு தரக்கோரி பாஜகவினர் 'சம்பர்க் சே சமர்தான்' என்ற கருத்துப் பரப்புதலை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு 'வேதனைகளை சாதனையாக காட்டும் சாகசம்' என்ற பொருளாகத்தான் இருக்க வேண்டும். இந்த கருத்துப்பரப்புதலில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்பட நடுவண்அமைச்சர்கள், முதன்மைத் தலைவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு பிரபலங்களை சந்தித்து வருகின்றனர். இந்த சந்திப்பின்போது, பாஜக அரசின் நான்கு ஆண்டு கால 'சம்பர்க் சே சமர்தான்' துண்டறிக்கைகள் விநியோகம் செய்யப்படும். அதன் ஒரு பகுதியாக, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று தெலுங்கானா மாநிலத்துக்கு சென்றார். ஐதராபாத்தில் உள்ள பிரபல சிறகுப்பந்து வீராங்கனை சாய்னா நேவால் வீட்டுக்கு அமித்ஷா சென்றார். அவரை நேரில் சந்தித்து பாஜகவின் 4 ஆண்டுகால ஆட்சியின் 'வேதனைகளை சாதனையாக காட்டும் சாகசம்' குறித்து விளக்கினார். அப்போது அவருடன் பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,848.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



