30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எண்பது அடியை நெருங்கியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்! காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் மழையால் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட வேண்டியதாகியது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 45,000 கன அடியில் இருந்து 46,210 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியை நெருங்கியுள்ளது. தற்போது மேட்டூர் அணையில் நீர் இருப்பு 41.41 டி.எம்.சியாக உள்ளது. இந்தியா விடுதலை பெற்ற பிறகும் தமிகத்திற்கு வரும் காவிரி நீரைத் தடுக்க, அத்துமீறி கர்நாடகம் அணைகளைக் கட்டியது. வறட்சி காலத்திலும் அணையில் நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு தமிழகத்திற்கு நீர்தர மறுப்பதை வாடிக்கையாக கொண்டு தங்கள் அறிவுக் கணக்கில் தெனாவெட்டாக ஒரு சொட்டு நீர்தர மாட்டோம் என்று அறிக்கை விடும். இயற்கை ஒரு கணக்கு போடும் பாருங்கள்! தண்ணீரைத் திறந்து விட்டு பேந்த பேந்த விழிப்பார்கள். தற்போது அவர்கள் அறிவுக் கணக்கால், ஆடுதாண்டா காவிரியிலும் அணைகட்டி விட்டால் அப்புறம் இந்த தண்ணீரையும் தமிழகத்திற்கு தராமால் அங்கே அடைத்து விடலாம் என்று பேசிக் கொண்டிருக்கறார்கள். அடலூசுப் பசங்களா! அறிவுக் கணக்கை விட இயற்கை போடும் கணக்கு ரொம்ப பெரிசப்பா! வறட்சி காலத்தில் அணையில் நிரைத் தேக்கி வைத்துக் கொண்டு தமிழகத்தையும், நடுவண்அரசையும், அறங்கூற்று மன்றங்களையும் எங்களுக்கே நீர் இல்லை என்று ஏமாற்றலாம்; இயற்கையை ஏமாற்ற முடியாது; அள்ளிக்கொண்டு போய்விடும்! அந்த ஆண்டு அதிக மழை பெய்யும் என்பது தாம் இயற்கை கணக்கு. கடல்தான் புயலுக்கு காரணம் போல, வறட்சி காலத்தில் கூடுதலாக தேக்கி வைக்கப் பட்ட நீரால் பருவமழை கூடுதலாகப் பெய்யத்தான் செய்யும் என்கிறார்கள் தமிழகத்தின் பழைய பெரிசுகள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,848.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



