ஆடை அடையாளம் என்பது கலாச்சாரத்தின் முதன்மைக்கூறு. பிக்பாஸ் பெண் போட்டியாளர்களின் ஆடை அடையாளம் தமிழ்க் கலாச்சாரத்திற்கு எதிராக உள்ளது. இது தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கப் படுகிற நிகழ்ச்சிதானே? என்பது மதுமிதாவின் ஆதங்கமாக இருக்கிறது. மதுமிதாவின் அந்த தமிழ்க் கலாச்சாரம் சார்ந்த இயல்பை மறுத்துள்ளார் நேற்றைய நிகழ்ச்சியில் கமல். 29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆடை அடையாளம் குற்றங்களுக்குக் காரணமாக இருக்கிறது என்கிற மதுமிதா போன்றவர்களின் வாதம், பாதிக்கப் பட்ட நபரைக் குற்றம் சுமத்துவதாக அமைகிறது. எனவே அது நல்ல விவாதமாக இல்லை. எனவே ஆடை அடையாளத்தை குறைபட்டுக் கொள்ள வேண்டிய தேவையில்லை. என்று முன்னெடுக்கிறார் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சில் கமல். தமிழக மக்கள் மதுமிதாவை அங்கிகரித்து, கடந்த கிழமை அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாகாத்ததும், இந்தக் கிழமையும் மதுமிதாவைப் பாதுகாப்பதற்கு முதல் இடத்தில் அதிக வாக்ககளால் மதுமிதாவை அங்கிகரித்து மக்கள் வாக்கு வங்கியை உருவாக்கியிருப்பதும். மதுமிதாவின் அந்த இயல்புக்காகத்தான். மதுமிதாவின் மீதான, தமிழ் மக்கள் அன்புக்கு அடிப்படையான, அந்த இயல்பின் மீதே கமல் கல்லெறிந்து இருப்பது, மதுமிதா மீது தமிழ்மக்கள் கொண்டிருக்கிற முடிவை மாற்ற முயல்கிறாரா கமல், என்ற ஐயத்தை நமக்குள் தோற்றுவிக்கிறது. தமிழ்க் கலாச்சாரத்தை காப்பாற்றும் பொறுப்பை, பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழ்க் குடும்பங்களே முன்னெடுத்து வருகின்றன. அறங்கூற்று மன்றங்களோ, வேறு சமய, மத அமைப்புகளோ அல்ல. மாறாக அந்த அமைப்புகள் அடிக்கடி தமிழக் குடுப்பப் பொறுப்பில் தலையிட்டு, தமிழ்க் கலாச்சாரத்தையும், ஒழுக்கத்தையும் முன்னெடுக்க இடைஞ்சல் ஏற்படுத்துவதுண்டு. அரசு நடத்தும் சாராய வணிகம், குடும்பத்தில் தன் மகனை சான்றோனாக வளர்க்கும் பொறுப்பிற்கு இடையுறாக இருப்பதை எடுத்துக் காட்டாக சொல்லலாம். அபிராமியிடம் தன்னிலை விளக்கம் கொடுக்க வந்த மதுமிதா, தமிழ்க் கலாச்சாரத்தின் ஆடை அடையாளம் குறித்த கட்டுப்பாட்டை முன் வைக்கிறார். தமிழ்க் கலாச்சாரத்தின் ஆடை அடையாளம் குறித்த தன்னுடைய அறிவுறுத்தல் அபிராமியை அழகுபடுத்தும் நோக்கத்திற்கானதேயன்றி, குற்றப் படுத்தும் நோக்த்திற்கான தன்று. ஒருவேளை அது குற்றப்படுத்தும் நோக்கத்திற்கானதாகி, தங்கள் மனம் பாதிக்கப் பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகத் தெரிவிக்கிறார். அவர் மதுமிதாவின் மென்மையைக் கொண்டாடி இருக்க வேண்டும். கொண்டாட வில்லை, இருக்கட்டும். தமிழ்மக்கள் தொடர்ந்து கொண்டாடவே செய்வார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,213.
இங்கேதான் கமல் பாதிக்கிறார். மதுமிதாவின் கண்ணோட்டமோ, தமிழ்க்குடும்பம் பல ஆயிரம் ஆண்டுகளாக பாதுகாத்து வரும் பண்பாட்டிற்காக, தமிழ்க்குடும்பங்கள் மீதான பெருமிதமோ அவருக்கு புரியவில்லை. மாறக சட்ட சமூகத்தின் பார்வையில் நின்று பார்த்து, பாதுகாப்பு அடிப்படைகளின் சின்ன சின்ன பண்பாட்டு அழகுகளை கொண்டாட மறுக்கிறார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



