பிக்பாஸ் பருவம் மூன்றில், எட்டு பேர்களை இனம்காட்டிய மதுமிதாவை சந்திக்க, சேரனைத் தொடர்ந்து தற்போது நேரில் சென்றுள்ளார் ரேஷ்மா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சேரனை அடுத்து ரேஷ்மா மதுமிதாவை சந்தித்துள்ளார். மேலும், சேரனை கவனித்தது போலவே ரேஷ்மாவிற்கும் விருந்து வைத்து அசித்துள்ளார் மதுமிதா. தற்போது நட்பில் ரேஷ்மா. 28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் சர்ச்சைக்கு எப்போதும் பஞ்சமே இருந்தது இல்லை. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது பருவம் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த பருவத்தில் பல சர்ச்சையான கருத்துருக்கள் நடந்தேறின. அதில் மிகவும் சர்ச்சையானதாகப் பார்க்கப்பட்டது மதுமிதாவின் திடீர் வெளியேற்றம் தான். மதுமிதா காவேரி உரிமை குறித்து பேசியதால், அவரை செரின் உள்ளிட்ட பையன்கள் (சாண்டி, தர்சன், முகென், கவின்) அணியும், ஈழத்தமிழ்ப் பெண்ணாக சிறப்பான உள்ளடக்கம் எதிர்பார்த்த நம்மை ஏமாற்றிய இலாஸ்லியாவும், வனிதா, மற்றும் அபிராமியும் பகடியாடி, புண்படுத்தி மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியதால் மதுமிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வேண்டியதாகியது. சமூக வலைத்தளத்தில் அப்போது இந்தச் செய்தி தீயாகப் பரவி வந்தது. பிக் பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா வெளியேறிய போது சேரன் மற்றும் கஸ்தூரியை தவிர வேறு யாரிடமும் பேச நான் விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார். மேலும் சேரன் மற்றும் கஸ்தூரியை தவிர அப்போது வீட்டில் இருந்த 8 பேரையும் துரோகிகளாக பார்த்தனர் இணைய ஆர்வலர்கள். பிக்பாஸ் இறுதிப்போட்டி நிறைவடைந்தது. பிக்பாஸ் இறுதிப் போட்டிக்கு மதுமிதாவின் குடும்பத்தினர் யாரும் வரவில்லை. இந்த நிலையில் சேரன்- வணக்கம், நான் மதுமிதாவிடம் பேசி கொண்டு தான் இருக்கிறேன். விரைவில் அவரை சந்திப்பேன் என்று பதில் அளித்திருந்தார். சொன்னதை போலவே சேரன் மதுமிதாவை சந்தித்துள்ளார். அண்மையில் மதுமிதாவை சந்திக்க அவரது வீட்டிற்கே சென்றுள்ளார் சேரன். மேலும், சேரனுக்கு, மதுமிதா விருந்தும் வைத்து அசத்தியுள்ளார். இந்த நிலையில் சேரனைத் தொடர்ந்து மதுமிதாவை சந்திக்க நேரில் சென்றுள்ளார் ரேஷ்மா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சேரனை அடுத்து ரேஷ்மா மதுமிதாவை சந்தித்துள்ளார். மேலும், சேரனை கவனித்தது போலவே ரேஷ்மாவிற்கும் விருந்து வைத்து அசித்துள்ளார் மதுமிதா. தற்போது நட்பில் ரேஷ்மா! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,366.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



