தலை முடியைச் சீர்செய்து கொள்ளும் ஒப்பனைக் கலை பழந்தமிழகத்தில் சிறந்து விளங்கியமைக்கு சங்ககால இலங்கியங்களில் சான்றுகள் உள்ளன. 28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தலை முடியைச் சீர்செய்து கொள்ளும் ஒப்பனைக் கலை பழந்தமிழகத்தில் சிறந்து விளங்கியமைக்கு சங்ககால இலங்கியங்களில் சான்றுகள் உள்ளன. பண்டைத் தமிழ் நூல்களில், பெண்களின் கூந்தல் ஒப்பனைகள் பற்றிய குறிப்புக்களும் வர்ணனைகளும் இடம்பெற்றுள்ளன. இவற்றிலிருந்து அக்காலத்துப் பெண்களின் கூந்தல் ஒப்பனைகள் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. இன்றைக்கு மணப்பெண்ணின் அழகை மெருகூட்டுவதற்கு பத்தாயிரம் இருபதாயிரம் என்று கூட செலவு செய்து தனியாக ஒப்பனைப் பெண்கள் நியமிக்கிறோம். பழந்தமிழகத்தில் அந்த இடத்தில் தோழியர் இருந்தனர். தமிழ் இலக்கியங்களில் கூந்தலைக் குறிப்பதற்குப் பல்வேறு சொற்கள் பயன்பட்டுள்ளன. கூழை, ஓதி, சிரியல், சுரியல், கோதை, குரல், கூரல், கொப்பு, முச்சி, சிகழிகை, மராட்டம், பரிசாரம், குந்தளம், விலோதம், மிஞ்சிகம், தம்மிலம் என்பன அவற்றுட் சில. இலக்கியங்களில் புலவர்கள் குறிப்பிட்டுள்ள பெண்கள் முடி ஒப்பனை வகைகள் குறித்த பட்டியல்: அதே சமயம் பழந்தமிழ் ஆண்கள் முடியை வளர்க்கும் பழக்கம் கொண்டிருக்கவில்லை. தாடி மீசையைக் கூட வெட்டி அழகுபடுத்திக் கொள்வார்கள். அதனாலேயே திருவள்ளுவர், மேலும் பழந்தமிழ் ஆண்கள் முடியை வெட்டி அழகு படுத்திக் கொள்வதற்கு கருவியும் கண்டிருந்தனர். பண்டைத் தமிழர்கள் அன்றாடம் பயன்படுத்திய பலவகை கருவிகளுள் மயிர்குறை கருவியும் ஒன்று. இன்றைக்கு நாம் இதை கத்திரிக்கோல் - கத்திரிகை என்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே கத்திரிக்கோலைத் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர். பத்துப்பாட்டுள் ஒன்றான பொருநராற்றுப்படையில் உள்ள ஒரு பாடலடி இதைச் சுட்டியுள்ளது. ‘மயிர்குறை கருவி மாண்கடை அன்ன’ (பொருந. 29). இச்சொல் பற்றிய குறிப்பு பண்டைக் காலத்திலேயே பல வகைப்பட்ட கத்திரிக்கோல்கள் இருந்துள்ளன என்பதைக் காட்டுகிறது. தலை முடியைச் சீர்செய்து கொள்ளும் ஒப்பனைக் கலையும் சிறந்து விளங்கி இருந்துள்ளதையும் காட்டுகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,366.
உச்சி முடிப்பு
முடி - (பிங்கல நிகண்டு)
சுருட்டி முடிப்பு
குழல் - (சீவக சிந்தாமணி, திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, புறநானூறு)
தொகுத்து முடிப்பு
கொண்டை - (சீவக சிந்தாமணி, திவாகர நிகண்டு, புறநானூறு)
பின்னி முடிப்பு
பனிச்சை - (சீவக சிந்தாமணி, திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு)
பின்னல் - புறநானூறு
பின்செருகி முடிப்பு
சுருள் - (திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு)
வகுத்து முடிப்பு
அளகம் - (சீவக சிந்தாமணி, புறநானூறு)
விரித்து முடிப்பு
துஞ்சை - (சீவக சிந்தாமணி)
வார்மயிர் - (திவாகர நிகண்டு, அகநானூறு)
வார்குழல் - (நாலாயிர திவ்வியப் பிரபந்தம், திருவாசகம்)
முடித்து விரித்தல்
தொங்கல் - (பிங்கல நிகண்டு)
கதுப்பு - (புறநானூறு, சிறுபாணாற்றுப்படை)
பழந்தமிழ் பெண்களிடம் முடியை ஒப்பனை செய்து கொள்ளும் பழக்கம் அன்றி, முடியை வெட்டிக் கொள்ளும் வழக்கம் இருந்ததில்லை.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
என்கிறார். இதன் பொருள்: உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய போலியான புறக்கோலங்கள் வேண்டாம் என்பதாகும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



