லாஸ்லியா மிக நல்லபெண். ஆனால் அவரின் கவின் மீதான முட்டாள்தனமான நம்பிக்கை உடும்பு பிடியாய் இறுகிக் கொண்டிருக்கிறது. இதை, முதலாவது சேரன், கஸ்தூரி, கமல், லாஸ்லியாவின் ஆசிரியர், இயக்குநர் இரவிக்குமார், பிக்பாஸ் அனைவரும் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். யாருடைய அறிவுரையும் எடுபடாத நிலையில், பிக்பாசும் கமலும் வேறு வகையான முயற்சியை முன்னெடுக்க இருப்பதாகத் தெரிகிறது. 09,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: லாஸ்லியா மிக நல்லபெண். ஆனால் அவரின் கவின் மீதான முட்டாள்தனமான நம்பிக்கை உடும்பு பிடியாய் இறுகிக் கொண்டிருக்கிறது. இதை, முதலாவது சேரன், கஸ்தூரி, கமல், லாஸ்லியாவின் ஆசிரியர், இயக்குநர் இரவிக்குமார், பிக்பாஸ் அனைவரும் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சேரன் பலமுறை லாஸ்லியாவிற்கு புத்தி சொல்ல முயன்று பகையைத்தான் சம்பாதித்துக் கொண்டார். ஆனாலும் தண்ணிரில் விழுந்த தேளை எத்தனை முறை கொட்டினாலும் வலியைத் தாங்கிக் கொண்டு, சான்றோர் பெருமகனார் ஒருவர் மீண்டும், மீண்டும் தரையில் எடுத்துவிட முயன்ற கதை போல, சேரன் லாஸ்லியாவை மீட்க தொடர்ந்து போராடி வருகிறார். சேரனின் முயற்சியை பரிதாபமாக கவனித்த கமலும், லாஸ்லியாவிற்கு புத்தி சொல்வதற்காகவே, வாக்குமூல அறைக்கு அழைத்து புத்தி சொல்லும் புதிய நடைமுறையையே கொண்டுவந்திருந்தார். ஆனால் லாஸ்லியாவைத் தவிர மற்றவர்கள் எல்லாம் ஊக்கம் பெற்றுக்கொண்டதாக தெரிகிறது. லாஸ்லியாவின் மீதான கமலின் முயற்சி விழலுக்கு இறைத்த நீராக வீணாகிப் போனதாகவே தெரிகிறது, கமலின் புத்திமதியை லாஸ்லியா எதிர் கொண்ட விதம். ஒவ்வொருவரும் புத்தி சொல்ல சொல்ல கவின் மீதான லாஸ்லியாவன் காதல் பைத்தியம், நஞ்சு தலைக்கேற லாஸ்லியா கிறுகிறுத்துக் கொண்டிருப்பதை நன்றக புரிந்து கொள்ள முடிகிறது. இது தொடர்பாகவே இந்தக் கிழமை கவினை வெளியேற்றம் செய்ய ஒவ்வொரு போட்டியாளர்களும் தீவிரமாக முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் பிக்பாசும் கமலும் வேறு வகையான முயற்சியை முன்னெடுக்க இருப்பதாகத் தெரிகிறது. இந்த கிழமைதான் வெளியேற்றப் படலம் இல்லையல்லவா? அதனால் போட்டியாளர்களுக்கு வெளியேற்றுவது போலக் காட்டி லாஸ்லியா அல்லது கவினை கமுக்க அறையில் வைத்து இருவரையும் பிரித்து பிக்பாஸ் நிகழ்ச்சி சுற்றுலாதளம் அல்ல போட்டி நிகழ்ச்சி தான் என்று நிரூபிக்க முனைந்திருக்கிறார்கள். அந்த அக்னித் தேர்விலாவது லாஸ்லியா காதல் கிறுக்கிலிருந்து விடுபட்;டு வெளியில் வருவாரா பார்ப்போம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,256.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



