Show all

தமிழ்த் திரைத்துறையில் ஒரு எண்ணிக்கையைக் குறைத்து- கொரோனா நிகழ்த்திய சோகம்! தயாரிப்பாளர் சாமிநாதன் காலமானார்

கொரோனா நோய் தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சாமிநாதன் காலமானார்

26,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் கே.முரளிதரன், ஜி.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து, அரண்மனைக் காவலன், வேலுச்சாமி, மிஸ்டர் மெட்ராஸ், கோகுலத்தில் சீதை, தர்மசக்கரம், பகவதி, உன்னை நினைத்து, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வீரம் வெளஞ்ச மண்ணு, பிரியமுடன், உன்னருகே நானிருந்தால், உனக்காக எல்லாம் உனக்காக, உன்னைத்தேடி, கண்ணன் வருவான், உள்ளம் கொள்ளை போகுதே, அன்பே சிவம், தாஸ், ஒருவன், சிலம்பாட்டம், புதுப்பேட்டை, ஆட்டநாயகன், சகலகலா வல்லவன் உட்பட ஏராளமான படங்களை தயாரித்தவர் வி.சாமிநாதன். சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தும் உள்ளார்.

இந்நிலையில் சாமிநாதனுக்கு கொரோனா நோய்தொற்று ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் காலமானார். சுவாமிநாதனின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சாமிநாதனின் மகன் அஸ்வின், ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி, கும்கி படம் மூலம் பேரறிமுகமாகி அதன்பின் ஏராளமான படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார். அண்மையில் தான் இவருக்கு திருமணம் ஆனது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.