இராம், அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பாட்டு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: நடிகர், இயக்குனர், துடுப்பாட்ட வர்ணனையாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கும் ஆர்.ஜே.பாலாஜி, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடி தான்’ படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் ஆர்.ஜே.பாலாஜி. அந்த படத்தில் இவருடைய நகைச்சுவை மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து எல்.கே.ஜி படத்தின் மூலம் கதைத்தலைவனாக அறிமுகமாகி வெற்றி கண்டார் ஆர்.ஜே. பாலாஜி. கடந்தாண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் பாஜக தூக்கிப்பிடிக்கும் ஹிந்துத்துவா அடாவடிகளுக்கும், தமிழர்தம் பொருள் இலக்கணத்தில் முன்னெடுக்கப்படும் குலதெய்வ வழிபாட்டிற்கும், இருக்கும் நுட்பத்தை தெளிவாக விளக்குவதில் வெற்றி கண்ட இயக்குனராக தமிழ் மக்களால்கொண்டாடப்பட்டார். இந்நிலையில், ஆர்.ஜே. பாலாஜி அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ் எம்.ஏ, தங்க மீன்கள், பேரன்பு போன்ற படங்களை இயக்கிய இராம், அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பாட்டு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



