Show all

பதினொன்றாம் வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கையில் விரும்பிய பாடப்பிரிவு வழங்கப்படுகிறது!

பதினொன்றாம் வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது. சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க பெற்றோர்கள் நடுவே ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக வருவாய் இழந்த குடும்பத்தினர் அரசு, மாநகராட்சி பள்ளிகளை நாடுகிறார்கள்.

01,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா குறுவித் தொற்று பரவலுக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் இன்று பதினொன்றாம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் குவிந்தனர்.

10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இன்னும் வழங்கப்படாத நிலையில், அனைத்து மாணவர்கள் தேர்ச்சி முடிவு காரணம் பற்றி, மாணவர்கள் கேட்கும் பாடப்பிரிவுகளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் சேர்க்கை நடந்தது. சென்னையில் மாநகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேருவதற்கு அதிக ஆர்வம் காட்டினார்கள்.

விரும்பிய பாடப்பிரிவுகளை வழங்க வேண்டும் என்று அரசு அறிவித்திருப்பதாலும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படாததாலும் விறுவிறுப்பாக சேர்க்கை நடைபெற்றது.

மாணவர்கள் எந்த பிரிவில் சேர்ந்து படித்தால் நல்லது என்று ஆலோசனை வழங்குவதற்காக ஆசிரியர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் நடுவே ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக வருவாய் இழந்த குடும்பத்தினர் அரசு, மாநகராட்சி பள்ளிகளை நாடுகிறார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.