Show all

ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா! சிறகடிக்கும் வகைகளின் எண்ணிக்கை 101ஆனது. திருவரங்கம் அருகே மேலூரில்

24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்சி மாவட்டம் திருவரங்கம் அருகே மேலூரில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 38 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்களுடன் வண்ணத்துப்பூச்சி பூங்கா தொடங்கப்பட்டது. 

இங்கு, குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள், செயற்கை நீருற்றுகள், நட்சத்திர வனம், சிறு மரப்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காக்களுள் ஒன்றாக விளங்குவதால், இங்கு வரக்கூடிய வண்ணத்துப்பூச்சி வகைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கான முயற்சிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி வண்ணத்துப்பூச்சிகள் மிகவும் விரும்பக்கூடிய எருக்கு, கறிவேப்பிலை, எலுமிச்சை, ஆமணக்கு, வில்வம், செண்பக மரம், தலைவெட்டிப்பூ, நாயுருவி உள்ளிட்ட தாவரங்களை அதிகளவில் வளர்க்கத் தொடங்கினர்.

இதனால் பிற பகுதிகளில் இருந்து சில்வர் ராயல், கிராஜுவல், கிரிம்ன்ஸன் ரோஸ், சதர்ன் பேர்டு விங், ப்ளு மார்மன், காமன் டெசிபல் போன்ற முதன்மையமான வகைகள் உட்பட ஏராளமான வண்ணத்துப்பூச்சி இனங்கள் இங்கு வரத் தொடங்கின. இவற்றை, வனத்துறையினரும், வண்ணத்துப்பூச்சி ஆராய்ச்சியாளர்களும், மாணவர்களும் இணைந்து படம்பிடித்து ஆவணப்படுத்தி வருகின்றனர்.

இதன்படி, கடந்தாண்டு 100வது வகை வண்ணத்துப்பூச்சியாக 'கூரான பிசிருயிர் நீலன்' என்ற வகை வண்ணத்துப்பூச்சியை படம்பிடித்து ஆவணப்படுத்தினர். அதன்பின் தற்போது 'காமன் நவாப்' வகை வண்ணத்துப்பூச்சியை வனத்துறையினர் அடையாளம் கண்டு, திருவரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு வந்த 101-வது வகையாக ஆவணப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து வண்ணத்துப்பூச்சி பூங்கா வன சரகர் முருகேசன் கூறும்போது, 'இந்தப் பூங்காவுக்கு வரக்கூடிய வண்ணத்துப்பூச்சி வகைகளின் எண்ணிக்கை படிப் படியாக அதிகரித்து வருகிறது. தற்போது 101-வது வகையாக 'காமன் நவாப்' வகை பதிவாகியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும்' என்றார்.

இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா, பல்லுயிர் பெருக்க ஆராய்ச்சி களமாகவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே இங்கு, வண்ணத்துப்பூச்சிகள் விரும்பக்கூடிய தாவர இனங்களை தட்வெப்ப நிலைக்கேற்ப வளர்ப்பது, பல்வேறு வகையான வண்ணத்துப்பூச்சி வகைகளை இனப்பெருக்கம் செய்வது, இவை தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வது போன்றவற்றுக்காக, தோட்டக்கலை, பூச்சியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய 4 துறைகளின் கீழ் தலா ஒரு இளம்நிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இங்கு தாவரவியல், தோட்டக்கலைக்கு மட்டும் இளம்நிலை ஆராய்ச்சியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களும் பணி மாறுதல் பெற்றுச் சென்றுவிட்டதால், தற்போது அந்த பணியிடங்களும் காலியாக உள்ளன. இதனால், கடந்த 6 மாதமாக பூங்காவில் எவ்விதமான ஆய்வு பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதாகவும், இதனால் பூங்காவின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் பலரும் இயற்கையை உற்றுநோக்கி அவர்தம் காலத்தில் வாழ்ந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பற்றிய பல செய்திகளை இலக்கியப் பாடல்களின் வழியாகப் பதிவுசெய்துள்ளனர். சங்கத் தமிழ்ப் புலவர்கள் எத்தனையோ பறவைகளைப் பற்றியும் இலக்கியங்களில் கூறியிருக்கும் நிலையில் ஒருபாடலில் கூட வண்ணத்துப் பூச்சியைப் பற்றிக் கூறாதது பெரும் வியப்பைத் தருவதாக இருக்கிறது.

இன்னதென்று வரையறுக்க முடியாத பல வண்ணக் கலவைகளில் அமைந்த சிறகுகளை ஓசையில்லாமல் அடித்துக்கொண்டு அழகாகப் பறந்து திரிந்து பூக்களில் இருந்து தேன் உண்ணும் இந்த பட்டாம்பூச்சிகளைப் பற்றிச் சங்க இலக்கியம் பேசவில்லை என்னும் நிலையில் இந்தியாவில் ஏறத்தாழ 300 க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. 

இவ் இனங்கள் அனைத்திற்கும் தமிழில் பெயர் சூட்டி தனது வலைபூவில் வெளியிட்டிருக்கிறார், ஆய்வியல் முனைவர் பட்டம் பெற்ற பொன்.சரவணன் என்கிற தமிழ் ஆர்வலர். 

வண்ணத்துப்பூச்சிகளின் பெயர் பட்டியல்:

வ.எண்

ஆங்கிலப் பெயர்

தமிழ்ப்பெயர்

1

common rose

செவ்வுடல் கருஞ்சி

2

crimson rose

சேயுடல் கருஞ்சி

3

malabar rose

செம்மேனி கருஞ்சி

4

common bluebottle

இருவெண் பழுசி

5

common jay

பால்பொறி பழுசி

6

tailed jay

பைம்பொறி கபிசி

7

spot swordtail

வெள்வரிக் கூர்வாலி

8

fivebar swordtail

பைவரிக் கூர்வாலி

9

common mime

சிதர்வரி கருஞ்சி

10

lime

உடுச்சிறை

11

malabar banded swallowtail

வெண்பொறிமழுவாலி

12

malabar raven

வெள்வரை கபிசி

13

red helen

செம்பொறி மழுவாலி

14

paris peacock

செங்கண் மழுவாலி

15

blue mormon

கரும்புகர் கருஞ்சி

16

malabar banded peacock

தோகை மழுவாலி

17

common mormon

சுறவாய் கருஞ்சி

18

common banded peacock

வெண்படு பைஞ்சி

19

common jezebel

செவ்வரை ஒண்சி

20

common emigrant

பழுக்கறை மஞ்சி

21

mottled emigrant

இலைவரி பைஞ்சி

22

small grass yellow

பைவரி மஞ்சி

23

spotless grass yellow

ஒள்வரி பைஞ்சி

24

onespot grass yellow

பழுப்புகர் மஞ்சி

25

common grass yellow

பசும்புல் மஞ்சி

26

three spot grass yellow

பல்புகர் மஞ்சி

27

nilgiri clouded yellow

ஒருகறை பைஞ்சி

28

psyche

பாசிறை வெண்சி

29

painted saw tooth

செவ்வரை குருசி

30

indian cabbage white

பாசிலை கோசி

31

common gull

பைவரி கருஞ்சி

32

lesser gull

வெள்ளெழில் கருஞ்சி

33

pioneer / caper white

ஒளிவரி வெண்சி

34

plain puffin

சருகன் வெண்சி

35

spot puffin

குருகன் வெண்சி

36

chocolate albatross

பழுவரை கபிசி

37

striped albatross

பழுவரி வெண்சி

38

common albatross

தேன்விரை பால்சி

39

lesser albatross

பால்படு பைஞ்சி

40

small salmon arab

பழுவரை மஞ்சி

41

small orange tip

ஒளிமுனை வெண்சி

42

crimson tip

செம்முனை வெண்சி

43

plain orange tip

எல்முனை வெண்சி

44

large salmon arab

பழுசிதர் மஞ்சி

45

white orange tip

மஞ்சள் வெண்சி

46

yellow orange tip

ஒளிமுனை பைஞ்சி

47

common wanderer

வெண்வரி பழுவரை

48

dark wanderer

வெண்வரி கார்வரை

49

great orange tip

ஒளிமுனை பெருஞ்சி

50

common five ring

ஐங்கண் அஞ்சி

51

southern duffer

இருங்கண் அஞ்சி

52

travancore evening brown

அங்கண் பழுசி

53

common evening brown

குறுங்கண் பழுசி

54

palm king

உறுகண் பழுசி

55

great evening brown

புள்ளி பழுசி

56

dark evening brown

அறைவாய் பழுசி

57

tailed palm fly

அரவாய் பழுசி

58

bamboo tree brown

பரல்கண் பழுசி

59

tamil tree brown

சிதர்கண் பழுசி

60

common tree brown

மலிகண் பழுசி

61

common bush brown

கருங்கண் பழுசி

62

whitebar bush brown

வெண்தார் கண்சி

63

dark brand bush brown

வெள்வரி கண்சி

64

tamil bush brown

தூவரி கண்சி

65

long brand bush brown

மீவெளிர் பழுசி

66

red disc bush brown

அனல்கண் பழுசி

67

glad eye bush brown

நகுகண் பழுசி

68

red eye bush brown

செம்பியல் பழுசி

69

nigger

பெருந்தார் கண்சி

70

jewel four ring

ஆந்தைக் கண்சி

71

tamil cats eye

வெருகுக் கண்சி

72

common four ring

குடிஞைக் கண்சி

73

common three ring

முக்கண் மென்சி

74

white four ring

நால்கண் மென்சி

75

striated five ring

ஐங்கண் வரிச்சி

76

baby five ring

ஐங்கண் மென்சி

77

nilgiri four ring

நால்கண் வரிச்சி

78

anamalous nawab

பன்னிற கூர்ச்சி

79

palni four ring

நால்கண் பழுசி

80

common nawab

ஒண்ணிற கூர்ச்சி

81

blue nawab

நீல்நிற கூர்ச்சி

82

black rajah

அரசக் கருஞ்சி

83

cruiser

மஞ்சிடை பழுசி

84

tawny rajah

அரசக் குருசி

85

tamil lacewing

அரவாய் புகர்சி

86

tamil yeoman

சிற்றலை ஒளிசி

87

tawny coster

கரும்புகர் குருசி

88

black prince

இளவல் கருஞ்சி

89

small leopard

வேங்கை குறுஞ்சி

90

rustic

துருமுனை பழுசி

91

common leopard

வேங்கை பெருஞ்சி

92

nilgiri frittilary

வேங்கை குருசி

93

palni frittilary

வேங்கை மென்சி

94

painted courtesan

வெள்வரி கருஞ்சி

95

neptis clinia

வெள்ளிடை பழுசி

96

common sailer

வெண்புகர்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.