நேற்றைய பிக்பாஸ் ஒரே தலைவலி. 100 நாள் போட்டி நிகழ்ச்சிக்கு தங்கள் வாழ்க்கையையே காலி செய்து கொள்வார்களா? 1.சாக்சி, 2.லாஸ்லியா, 3.கவின். எதற்கு பிக்பாசின் இந்த மொட்டக் கடுதாசி வேலைப்போட்டி? கவின் நல்லவரா, கெட்டவரா? லாஸ்லியா? இப்படி பார்வையாளர்களுக்கு ஆயிரம் கேள்விகள் எழுந்து, நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரே தலைவலி. 17,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அனைத்துத் தொலைக்காட்சிகளுக்கான பார்வையாளர்கள் அனைவருமே சன்தொலைக்காட்சியின் கொடைதான். தமிழகத்தில், புதிய புதிய நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமான பார்வையாளர்களை அறுவடை செய்தது சன் தொலைக்காட்சிதான். சன் தொலைக்காட்சியின், நீண்ட நெடிய மற்றும் பகைவன்களுக்கு, பகைவிகளுக்கு முதன்மைத்துவம் தரும் தொடர்கள் தாம், பார்வையாளர்களை சன் தொலைக்காட்சியிலிருந்து வேறு தொலைக்காட்சிகளுக்கு கொத்து கொத்தாக விரட்டி அடித்தது. கடந்த இரண்டு பருவங்களில் எதிர்நிலை போட்டியாளர்களை கடைசி வரை தக்க வைத்துக் கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவை குன்றாமல் முன்னெடுத்து வந்தது விஜய் தொலைக்காட்சி. இந்த பருவத்தில், எதிர்நிலை போட்டியாளர்களை, (சிறப்பாக வனிதா) தொடக்கத்திலேயே பார்வையாளர்களின் வாக்குகள் அடிப்படையில் நேர்மையாக போட்டியாளர்களின் வெளியேற்றப் படலத்தை நடத்தியதால் கழட்டி விட்டு விட்டது. இதனால் சுவை குன்றாமல் பிக்பாசை முன்னெடுக்க மொட்ட கடுதாசி போல சப்பையான வேலைப்போட்டிகளை முன்னெடுக்க வேண்டியதானது. இந்த மொட்டைக் கடுதாசி போட்டியாளர்களிடம் ஏற்படுத்திய கலவரம், குறிப்பாக கவின்- சாக்சி- லாஸ்லியா முக்கோணப் புதிரை விடுவிக்கப் போய், சுவை குன்றுவது மட்டுமல்லாமல் நேற்று கடுமையான தலைவலியை கொடுத்தது விஜய் தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு. மீண்டும் பிக் பாஸில் முக்கோண காதல் கதை தலைத்தூக்க தொடங்கிய நிலையில் கடந்த சனிக்கிழமை சாக்லெட் கொடுத்து முடித்து வைத்திருந்தார் கமல். ஆனால் இந்த கிழமை நேற்றைய் மொட்ட கடுதாசி வேலைப்போட்டியைத் தொடங்கி மீண்டும் இந்த விளையாட்டிற்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்துள்ளார் பிக் பாஸ். தொடக்கத்தில், நல்லதொரு வரவேற்பை பெற்ற வேட்டையன் புகழ் கவின், வர வர மாமி கழுதையான கதையாகி விட்டார். என்னன்னோமோ செய்து அங்கு கொஞ்சம் இங்கும் கொஞ்சம் என எதை எதையோ பேசி, கடைசியில் நான் வெளியே போறன்ப்பா நிலைமைக்கு வந்து விட்டார் கவின். கவின் போலவேதான் தொடக்கத்தில் மைனா, அழகி என வர்ணிக்கப்பட்டவர் இப்போது கூடுதல் நடிப்பால், பார்வையாளர்களுக்கு, சலிப்பை ஏற்படுத்தியுள்ளார் லாஸ்லியா. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,232.
அந்தப் பார்வையாளர்களில் பெரும்பான்மையானவர்களை பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி அள்ளிக் கொண்டது விஜய் தொலைக்காட்சி.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.