இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா, வனிதா தமிழ்ப்பண்பாட்டு உடைகளில், பண்பாட்டு உடையில் செரின்; மூவருமே அழகாகத் தெரிந்தார்கள். ஆண்களும் அரையாடையைத் தவிர்த்து அழகாகவே யிருந்தனர். பிக்பாஸ்தமிழ் பருவம் மூன்றை மதுமிதா காணவிரும்பியவாறு இன்றுதான் தென்பட்டது விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சி. 28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்று கமல்ஹாசன் லாஸ்லியா தந்தை வீட்டிற்குள் வந்து சென்றது குறித்து கவினிடம் பேசினார். அப்போது லாஸ்லியா அப்பா உங்களிடம் எந்தவித கோபத்தையும் வெளிப்படுத்தவில்லை, அவர் ஒரு சிறந்த மனிதர். அவர் வந்து போனது ஒரு திகில்காட்சி படத்தை பார்த்தது போன்று இருந்தது என்று தெரிவித்தார். ஆனால் ஒரு அப்பாவாக நான் எப்படி செயல்பட்டிருப்பேனோ அதை விட அவர் சிறப்பாக செயல்பட்டார் என்று கவினுக்கு அவரை பற்றி எடுத்து கூறி லாஸ்லியாவின் பெற்றோரைப் பாராட்டினார். லாஸ்லியாவை திருத்திட எத்தனை முன்னெடுப்புகள். சேரனும், கமலும், பிக்பாசும் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்கள். அப்பாடா! உண்மையான அப்பாவால்தான் லாஸ்லியாவை திருத்த முடிந்திருக்கிறது. லாஸ்லியா திருந்தியிருக்கிறார்! இன்றைய நிகழ்ச்சியில் அதை லாஸ்லியாவின் நடவடிக்கையில் தெரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. ஆம் வனிதாவோடு அமர்ந்திருந்தார். மொத்தத்தில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி நல்லதொரு அழகியல் நிறைந்த கவிதை. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,275.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



