Show all

ஐந்து மந்திரம்! நீங்கள் வியந்திருக்கும் எந்தஎல்லையைத் தொடுவதற்கும்

சிலருக்கு அவர் விரும்பும் விளையாட்டு வீரரே எல்லை.
சிலருக்கு அவர் விரும்பும் பெரும் கல்வியாளரே எல்லை
சிலருக்கு அவர் விரும்பும் பெரும்பணக்காரரே எல்லை.
சிலருக்கு அவர் விரும்பும் அரசியல் தலைவரே எல்லை
சிலருக்கு அவர் விரும்பும் பெருங்கலைஞரே எல்லை. 
இந்த எல்லைகள் மாதிரி, நீங்களும் பலர்வியக்கும் எல்லையாகி, நீங்கள் வாழும் காலத்திலேயே, பலரின் கனவுலகக் கதைத்தலைவன் ஆவதற்கு உங்களால் முடியும். அதற்கு நீங்கள் கட்டவேண்டியது ஐந்து மந்திரம் மட்டுமே என்று தெளிவுபடுத்துவதற்கானது இந்தக் கட்டுரை.

07,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5126:

இயற்கையின் அனைத்தும் ஐந்திரங்களால் ஆனவை என்று தெள்ளத்தெளிவாக நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர். 
ஐந்துதாம் இத்தனைக்கும் அடிப்படையா?
ஆம்! ஐந்துதான் இத்தனைக்கும் அடிப்படை.

அதில்கூட நான்கு- உங்கள் உருவாக்கத்தில் பங்கு வகிப்பவையாக இருக்கின்றன. 
அந்த நான்கு: 1.நிலம் 2.நீர் 3.தீ 4.காற்று என்பன.
இந்த நான்கும் உங்கள் உடல்.

ஐந்தாவது ஒன்று இருக்கிறதே அதுதான் உங்கள் உயிர்.
ஐந்தாவது ஒன்று இருக்கிறதே அதுதான் உங்கள் வாழ்க்கை. 
ஐந்தாவது ஒன்று இருக்கிறதே அதுதான் உங்கள் எல்லை. 
ஐந்தாவது ஒன்று இருக்கிறதே அதுதான் உங்கள் தலையெழுத்து. 
ஐந்தாவது ஒன்று இருக்கிறதே அதுதான் உங்கள் உயிர், வாழ்க்கை, எல்லை, தலையெழுத்து அனைத்தையும் உங்களுக்கு முயக்கித்தருவதற்கான அடிப்படை. 

அந்த ஐந்தாவது: நிலம் நீர் தீ காற்று என்கிற நாற்திரங்கள் இறைந்து கிடக்கிற வெளி. நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரங்களைத்தான் இறை என்று நிறுவினர் தமிழ்முன்னோர்.

இயக்கமும் எல்லையும் இல்லாதது அந்த வெளி. அதனால்தாம் அந்த வெளியில் இறை என்ற தலைப்பில் தமிழ்முன்னோர் சுட்டிய நிலம் நீர் தீ காற்று என்கிற நாற்திரங்களும் இயங்க முடிகின்றன.

அந்த வெளியில், நாற்திரங்களால் உருவான, நாமும் இயங்குவதால், நம் அனைத்தாலும் அந்த வெளி இயக்கம் பெற்று, விண்வெளி என்கிற இரண்டாவது நிலை எய்துகிறது. 

இயக்கம் இல்லாத வெளி, நம் அனைத்தாலும் இயக்கம் பெற்ற விண்வெளியாகிய நிலையில் தன் சொந்தஇயல்பான இயக்கமின்மையை அடைய நம் அனைத்தாலும் பெற்ற இயக்கத்தை நமக்கே திருப்பிவிடுகிற முயக்கத்திற்காக, சொந்த இயக்கமில்லா வெளி- எய்தும் மூன்றாவது நிலை விசும்பு ஆகிறது.

நாம், வெளியை இயக்கிய வகைக்கே, வெளியின் மூன்றாவது நிலை விசும்பு நம்மை முயக்கும் காரணம் பற்றி, அந்த விசும்பிடம் இருந்து பெறும் முயக்கத்தை நமது விருப்பத்திற்கு பெற்றிட முடியும். என்று தெளிவாக நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா
என்கிற முழக்கம், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்முன்னோர் நிறுவியிருந்து, கணியன் பூங்குன்றானர் நமக்கு உரைத்துச் சென்றது.

இதில்-
நம்முடைய தலையெழுத்தை நாம்தாம் எழுதிக் கொள்கிறோம்.
நம்முடைய தலையெழுத்தை நாம் எழுதிய வகைக்கே கடவுள் நம்மை முயக்க முடியும் என்று தெளிவாக நிறுவப்பட்டுள்ளது.

ஆனால், நடப்பு நிலையில், பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், பல்வேறு மதங்கள், மார்க்சியம், திராவிடம் உள்ளிட்;ட அயல் மலைப்பில், ஒவ்வொருவரும் வேறு வேறாக அவைகளில் ஒன்று தங்களை முயக்குவதாக எண்ணிக்கொண்டு, அவைகளுக்கு ஒப்புக் கொடுப்பதால், அவைகள் தமிழ்மக்களால் வளர்க்கப்டுகின்றன, பல ஆயிரம் ஆண்டுகளாக.

இதனால், தமிழ்த்தொடராண்டு 1400 லிருந்து நடப்பு 5126 ஆம் ஆண்டுவரை நம்மோடு கலந்து வருகிற பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், பல்வேறு மதங்கள், மார்க்சியம், திராவிடம் என்கிற அயல்பாடுகளில், நமது உடைமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்த வண்ணமாகவே இருக்கிறோம். 

தமிழ்த்தொடராண்டு 1400க்கு முன்பு, இமயம் தொட்டு குமரிக்கண்டம் வரை அமைந்த நாவலந்தேயம் (இந்தியா) என்கிற மண்ணில் நூறு விழுக்காடும் தமிழ்மக்கள் மட்டுமே வாழ்ந்திருந்தோம். 

பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், பல்வேறு மதங்கள், மார்க்சியம், திராவிடம் என்கிற அயல் சார்புகளால், நாம் நம் தமிழில் இருந்து (1)அசாமிஸ், (2)பெங்காலி, (3)குஜராத்தி, (4)ஹிந்தி, (5)கன்னடம், (6)காஷ்மீரி, (7)கொங்கனி, (8)மலையாளம், (9)மணிப்பூரி, (10)மராத்தி, (11)நேபாளி, (12)ஒரியா, (13)பஞ்சாபி, (14)சமஸ்கிருதம், (15)சிந்தி, (16)தெலுங்கு, (17)உருது (18)போடோ, (19)சந்தாலி, (20)மைதிலி மற்றும் (21)டோக்ரி. என்பனவான இருபத்தியோரு மொழியினங்களை உருவாக்கியிருக்கிறோம். 

மேலும் நமது ஆட்சி அதிகாரத்தை ஹிந்தி மொழி பேசும் ஒற்றை இனத்திற்கு காவு கொடுத்திருக்கிறோம். நடப்பில் எந்த அதிகாரமும் இல்லாத தமிழ்நாடு என்கிற குறுகிய மண்ணில் தொடர்ந்து அயல்சார்புகளின் தொழில் வணிக தனித்திறன் தளத்தில் நம்மை நிருவாகக் கூலியாகவும், உழைப்புக் கூலியாகவும் பிணைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தி வருகிறோம்.

பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், பல்வேறு மதங்கள், மார்க்சியம், திராவிடம் என்கிற அயல் சார்புகளில் நாம் விழுவதற்கு முன்பு, நாம் கொண்டிருந்த ஐந்து மந்திரங்களை மீண்டும் ஓதி- இருக்கிற குறைந்த தமிழ்மண்ணிலாவது தமிழ்மக்களுக்கான அதிகாரத்திற்கு முனைவோம்.

முதலாவது மந்திரம்:
எந்தன் பிள்ளையும் கடவுளும் ஆன விசும்புத் தெய்வமே!
எந்தன் உடல்நலம் பேணிட ஓதிடும் மந்திர முழக்கம்.
தருகுவே உடல்நலம் தருகவே உடல்நலம் எனக்குத் தருகவே.

இரண்டாவது மந்திரம்:
எந்தன் பிள்ளையும் கடவுளும் ஆன விசும்புத் தெய்வமே!
எந்தன் மனவளம் பேணிட ஓதிடும் மந்திர முழக்கம்.
தருகுவே மகிழ்ச்சி மனத்தினில் மகிழ்ச்சி எனக்குத் தருகவே.

மூன்றாவது மந்திரம்:
எந்தன் பிள்ளையும் கடவுளும் ஆன விசும்புத் தெய்வமே!
பொருளாதாரம் பேரளவாகத் தந்திட ஓதிடும் மந்திர முழக்கம்.
தருகவே எனக்குப் பொன்னும் பொருளும் மனையும் வீடும்.

நான்காவது மந்திரம்:
எந்தன் பிள்ளையும் கடவுளும் ஆன விசும்புத் தெய்வமே!
பயண ஏந்தும் பாதுகாப்பும் தந்திட ஓதிடும் மந்திர முழக்கம்.
தருகவே எனக்கு வண்டியும் வாய்பும் பயணக் காப்பும்.

ஐந்தாவது மந்திரம்:
எந்தன் பிள்ளையும் கடவுளும் ஆன விசும்புத் தெய்வமே!
கலைத்திரம் தொடர்புகள்  தந்திட ஓதிடும் மந்திர முழக்கம்.
என்திறன் போற்றி பாராட்டும் தொடர்புகள் வளமாய் தருகவே.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,985.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.